எனக்குள்ளயும் நீலாம்பரி இருக்கா... ’தமிழும் சரஸ்வதியும்’ மீரா கிருஷ்ணன் பேட்டி!

 மீரா கிருஷ்ணன்
மீரா கிருஷ்ணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’தமிழும் சரஸ்வதி’யும் சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு கடந்த வாரமே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் கோதை கதாபாத்திரத்தில் ஹீரோ தமிழின் அம்மாவாக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகை மீரா கிருஷ்ணன். சீரியல் அனுபவம் குறித்தும் அவருடைய மீடியா பயணம் பற்றியும் காமதேனு டிஜிட்டலுக்காகப் பேசினோம்.

'தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் முடிந்துவிட்டது என்ற உணர்வு எப்படி இருக்கிறது. டிஆர்பி குறைவு என்பதால்தான் இந்த முடிவு என்கிறார்களே?

 மீரா கிருஷ்ணன்
மீரா கிருஷ்ணன்

இத்தனை நாட்கள் கோதையாக எனக்கும் இந்த சீரியலுக்கும் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எங்களுக்குத்தான் ஷூட் முடிந்திருக்கிறது. உங்களுக்கு இன்னும் சில எபிசோட் ஒளிபரப்பாகும். கடந்த மூன்று வருடங்களாக இந்த சீரியலில் எல்லோரும் நல்ல நட்பில் இருக்கிறோம். ஹீரோ, ஹீரோயினைத் தாண்டி சீரியலில் கோதை என்று முக்கியமான ஒரு கதாபாத்திரம் கொடுத்தார்கள். என்னுடைய பெஸ்ட்டை கொடுத்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன்.

சீரியல் என்று ஒன்று ஆரம்பித்தால் அது முடிவுக்கு வருது இயல்பானதுதானே. மூன்று வருடங்கள் டிஆர்பி-யும் சரி ரசிகர்கள் ஆதரவும் எங்களுக்கு நன்றாகவே இருந்தது. டிஆர்பி இடையில் முன் பின் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது. நன்றாக இருக்கும்போதே முடிக்கலாம் என்ற முடிவுதான் சீரியலை முடிக்கக் காரணம்.

இந்த சீரியலின் இரண்டாம் பாகம் வரும் என்று எதிர்பார்க்கலாமா?

’தமிழும் சரஸ்வதியும்’ டீம்
’தமிழும் சரஸ்வதியும்’ டீம்

நிச்சயம் இல்லை! ஆனால், இதே டீம் மீண்டும் இணைந்து புதிய சீரியலில் நடிக்கும். அதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. ஏனெனில், இயக்குநருக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் நல்ல கனெக்‌ஷன் இருக்கிறது. அதேபோல, எங்களுக்குள்ளும் நல்ல நட்பு உருவாகி இருக்கிறது. அதனால் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சமூகவலைதளங்களில் டான்ஸ் வீடியோ ரீல்ஸ் போட்டு அசத்துகிறீர்களே..?

டான்ஸ் ஆடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் என்னை மாமியார் கதாபாத்திரத்தில் நிறையப் பேர் பார்த்துப் பழகிவிட்டார்கள். அதனால், திடீரென்று என்னுடைய சமூகவலைதளங்கள் டான்ஸ் வீடியோ பார்த்து அதிர்ச்சியாகி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

சிறுவயதில் இருந்தே பரதநாட்டியத்தில் முறையான பயிற்சி பெற்றிருக்கிறேன். அதனால், ஷூட்டிங்கிற்கு இடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு குட்டி டான்ஸ் போட்டு விடுவேன். டான்ஸ் ஆடுவது மனசுக்கும் ரொம்ப ரிலாக்ஸான விஷயம்தான்!

வீட்டில் நடிப்புக்கான சப்போர்ட் எப்படி இருக்கிறது?

கணவருடன் மீரா கிருஷ்ணன்
கணவருடன் மீரா கிருஷ்ணன்

ரொம்பவே நன்றாக இருக்கிறது. என்னுடைய கணவர் சிவா நல்ல டான்சர். லாரன்ஸ் மாஸ்டருடைய டீமில் இருந்தார். ‘காஞ்சனா’ படத்தில் வரும் ’மொட்ட பையா...’ பாடல் எல்லாம் அவர் கொரியோகிராஃப் செய்ததுதான். இடையில் குழந்தை பிறந்தபோது மட்டும் கொஞ்ச நாள் நடிப்புக்கு பிரேக் எடுத்தேன்.

படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் என் கணவரை சந்தித்தேன். அவருக்கு என்னைப் பிடித்துப் போனதும் முறையாக வீட்டுக்கு வந்து திருமணம் பற்றிப் பேசி முடித்தார்.

சீரியல்கள் நிறைய நடித்து இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பெரிதாக வரவில்லையா?

என்னதான கோதையாக பவ்யமாக நடித்து இருந்தாலும் எனக்கு வில்லி கதாபாத்திரம்தான் ரொம்பப் பிடிக்கும். தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த வில்லி கதாபாத்திரம் என்றால் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்தைச் சொல்வேன். கோதை நீலாம்பரியாகும் காலத்தை நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

அதேபோல, சரண்யா பொன்வண்ணன் நடிக்கும் கதாபாத்திரங்களில் நகைச்சுவையும் சேர்ந்து இருக்கும். அதுபோன்ற வலுவான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நான் நடிக்க ரெடிதான். மற்றபடி சீரியல் ஷெட்யூல், குடும்பம் என இதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in