பரபரப்பு... மும்பை மக்களைக் கோபப்படுத்திய நடிகை மன்னாரா சோப்ரா வெளியிட்ட வீடியோ!

நடிகை மன்னாரா சோப்ரா
நடிகை மன்னாரா சோப்ரா

மும்பையில் கனமழையால் விளம்பரப் பலகை விழுந்து 14 பேர் உயிரிழந்த நிலையில், மழையில் மகிழ்ச்சியாக நடிகை மன்னாரா சோப்ரா நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றார்.. இதன்பின் நடிகர் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பாலிவுட் படங்களில் நடிப்பதன் மூலம் பிரபல நடிகையாக மாறினார்.

நடிகை பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா

இவரது தங்கை மன்னாரா சோப்ரா. பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று அசத்திக் கொண்டிருக்கும் நடிகையாவார். இந்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான 'சண்டமாருதம்', நடிகர் விமல் நடிப்பில் வெளியான 'காவல்' ஆகிய படங்களில் மன்னாரா சோப்ரா நடனமாடியுள்ளார்.

இவர் தற்போது நடனமாடி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவைத்தான் நீக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தனது வீட்டின் பால்கனியில் மழையில் நனைந்தபடி நேற்று ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் நடிகை மன்னாரா சோப்ரா பகிர்ந்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவுடன்  மன்னாரா சோப்ரா
பிரியங்கா சோப்ராவுடன் மன்னாரா சோப்ரா

இந்த வீடியோவை தான் நீக்குமாறு பலரும் மன்னாரா சோப்ராவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மும்பையில் பெய்து வரும் கனமழையால், பிரம்மாண்ட விளம்பரப் பலகை விழுந்து 14 பேர் உயிரிழந்தனர். 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனால் பலரும் சோகத்தில் இருக்கும் போது மன்னாரா சோப்ரா மழையில் மகிழ்ச்சியாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளது தான், மும்பை மக்களின் கோபத்திற்குக் காரணமாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in