அச்சச்சோ காஜலுக்கு என்ன ஆச்சு... வீங்கிப் போன முகத்தால் ரசிகர்கள் ஷாக்!

நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில், அந்தப் படத்தில் முகம், உதடு வீங்கிப் போய் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் நடிகை காஜல்.

’துப்பாக்கி’, ‘பழனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தார். திருமணம், குழந்தைக்குப் பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்தார். தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

நடிகர் கமல்ஹாசனுடன் இவர் நடித்திருக்கும் ‘இந்தியன்2’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது. இதில் முதல் பாகத்தில் வந்த நடிகை சுகன்யாவின் கதாபாத்திரத்தில் தான் காஜல் நடிப்பதாக தெரிகிறது. ஆக்‌ஷன் அவதாரத்தில் காஜல் நடித்திருக்கும் ‘சத்யபாமா’ என்ற திரைப்படம் வருகிற மே 17 அன்று வெளியாகிறது.

இந்தப் படத்தின் புரோமோஷன்களில் காஜல் கலந்து கொண்டிருக்கிறார். அதில்தான் அவரது முகத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி உள்ளனர். முகம், உதடு எல்லாம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார் காஜல்.

காஜல்
காஜல்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in