எதே, ஆன்லைனில் ஒவ்வொரு வருஷமும் ஓட்டா?... வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட ஜோதிகா!

நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா

”ஒவ்வொரு வருடமும் தேர்தல் நடக்கும்ல, ஆன்லைனில் கூட ஓட்டுப் போடலாம்ல” என ஜோதிகா பேசியுள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாயைக் கொடுத்து இப்படி வம்படியாக மாட்டிக் கொண்ட ஜோதிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

நடிகை ஜோதிகா நடித்துள்ள ‘ஸ்ரீகாந்த்’ படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட ஜோதிகாவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில், ”சமூக அக்கறை குறித்து பொதுவெளியில் பேசும் நீங்களே ஏன் இந்த வருடத் தேர்தலில் ஓட்டுப் போட வரவில்லை?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா

அதற்கு ஜோதிகா, “வருடா வருடம் நடக்கும் தேர்தலில் நான் ஓட்டுப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்” என்றார். உடனே அங்கிருந்த பத்திரிகையாளர்கள், ஐந்து வருடத்திற்கு ஒருமுறை எனத் திருத்தினர். அதன்பிறகு, இந்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

”ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நான் ஓட்டுப் போடுவேன். ஆனால், இந்த முறை சில தனிப்பட்ட காரணங்களால் வர முடியவில்லை. சில நேரங்களில் ஊருக்குப் போகலாம், உடல்நலக் குறைவால் இது நடக்கலாம். இது தனிப்பட்ட விஷயம். நாம் தனிப்பட்ட முறையில் ஆன்லைனில் கூட ஓட்டுப் போடலாம். எல்லாவற்றையும் பொது வெளியில் சொல்ல வேண்டும் என்றில்லை. தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என்றார்.

நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா

இதுதான் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, ‘ஆன்லைனில் கூட ஓட்டுப் போடலாம்’ என ஜோதிகா சொல்லியதை வைத்து வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள். ‘இந்தியாவில் ஆன்லைனில் ஓட்டுப் போடுவது என்பதே இல்லையே! அப்படி என்றால், ஜோதிகா மட்டும் எப்படி ஓட்டுப் போட்டார்? ஓட்டு போட வராமல் இருந்ததற்கு இப்படி ஒரு உருட்டு!’ என வறுத்தெடுத்து வருகின்றனர்.

இன்னும் சிலரோ, ‘இது தெரிந்திருந்தால் நாங்கள் நீண்ட வரிசையில் நிற்காமல் ஆன்லைனிலேயே ஓட்டுப் போட்டிருப்போமே!’ எனக் கேலி செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in