கவுதமியின் நில அபகரிப்பு புகார்... பாஜக பிரமுகரின் மனைவி, மருமகளுக்கு ஜாமீன்!

கவுதமியின் நில அபகரிப்பு புகார்... பாஜக பிரமுகரின் மனைவி, மருமகளுக்கு ஜாமீன்!

நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் அழகப்பனின் மனைவி மற்றும் அவரது மருமகள் கைது செய்யப்பட்டனர். இப்போது அவர்களுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை கவுதமி தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். பாஜகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை எனச் சொல்லி அங்கிருந்து விலகியவர் சமீபத்தில் அதிரடியாக அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது தனது சொத்துக்களை விற்பதற்காக சினிமா தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அழகப்பன் என்பவரை பவர் ஆஃப் அட்டர்னியாக நியமித்திருந்தார்.

அதன்படி 2004ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சொத்தை விற்று, செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை வாங்கிய அழகப்பன், அந்த நிலத்தை கவுதமி பெயரிலும், தனது மனைவி நாச்சாள் பெயரிலும் பதிவு செய்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்த அழகப்பன் மீது புகார் கொடுத்தார் கவுதமி. இதன்படி அழகப்பன், நாச்சாள், இவர்களது மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் K.M.பாஸ்கர், ஓட்டுநர் G. சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி கைது செய்தனர்.

உயர் நீதிமன்றம், சென்னை
உயர் நீதிமன்றம், சென்னை

இந்த வழக்கில் அழகப்பனின் மனைவி நாச்சாள் மற்றும் மருமகள் ஆர்த்தி ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதன்படி, நாச்சாளின் உடல்நிலை மற்றும் மருமகள் ஆர்த்தியின் இரண்டு வயது குழந்தையை கருத்தில் கொண்டு ஜாமின் கோரப்பட்டது. ஆனால், இதற்கு கவுதமி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இப்போது அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 5ம் தேதி தாக்கல் செய்யவும், சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதற்கு அனுமதி வழங்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

பாஜக அமைச்சரவை திடீர் ராஜினாமா... ஹரியாணாவில் பரபரப்பு!

ஷாக்... பர்தா அணியாமல் சென்ற மனைவி: பிரியாணி கரண்டியால் அடித்துக் கொன்ற கணவன்!

சமகவை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்... மோடி காமராஜர் போல் ஆட்சி நடத்துவதாக புகழாரம்!

1 கோடி பெண்கள் குஷ்புவை கிழிச்சு தொங்கவிடுவாங்க... அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

ஷாக்... படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி: லாரி மோதி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in