நிலமோசடி வழக்கில் விசாரணை... நடிகை கவுதமி பரபரப்பு பேட்டி!

நடிகை கவுதமி
நடிகை கவுதமி

ராமநாதபுரத்தில் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 கோடி மோசடி செய்த நபர் மீது திரைப்பட நடிகை கௌதமி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதன் பேரில் இன்று விசாரணை நடைபெற்றது.

பணம் பெற்று தன்னிடம் நிலமோசடி செய்துவிட்டதாக காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் மீது நடிகை கவுதமி கொடுத்த புகாரின் பேரில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவத்தான் என்ற பகுதியில் பல ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக அழகப்பன் சொல்லி இருக்கிறார். இதற்காக, கவுதமியிடம் அவர் ரூ. 3 கோடி பணம் பெற்றுள்ளார். பின்பு, சுமார் 64 ஏக்கர் நிலம் ரூ. 57 லட்சம் மதிப்பில் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த நிலமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. அதை அழகப்பன் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது. விஷயம் தெரிய வந்ததும் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் ஏற்கெனவே கவுதமி புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் மாவட்ட குற்றப்பிரிவில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக கவுதமி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்கு குறித்தும் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் காவல்துறை அதிகாரியிடம் நேரடியாக விளக்கம் அளித்தார்.

இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி, கவுதமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். “நிலம் வாங்கி தருவதாக சொல்லி நான் ஏமாற்றப்பட்டேன். தவறான ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

 கவுதமி
கவுதமி

இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இந்த மோசடி குறித்து மேலும் கேள்விகள் எழுப்பியபோது, “விசாரணை நடைபெற்று வருவதால் இதற்கு மேல் இதை பேசுவது சரியாக இருக்காது” என அவர் மறுத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து... வக்கீல் பரபரப்பு பேட்டி!

திடீர் பரபரப்பு... தொழில்நுட்ப கோளாறால் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்தி வைப்பு!

அதிர்ச்சி... பல்கலைக்கழக தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலம்!

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

பகீர் வீடியோ... 15வது மாடியில் இருந்து குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை! பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in