டிரான்ஸ்பரன்ட் சேலையில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை... விளக்கம் கொடுத்து சரண்டர்!

நடிகை சைத்ரா பிரவீன்...
நடிகை சைத்ரா பிரவீன்...

பட விழாவிற்கு நடிகை சைத்ரா பிரவீன் அணிந்து வந்துள்ள டிரான்ஸ்பரன்ட் சேலை ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை சைத்ரா பிரவீன்
நடிகை சைத்ரா பிரவீன்

படவிழாக்களில் நடிகைகளின் உடை, ஹேர்ஸ்டைல் என ஒவ்வொரு விஷயமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று பேசுபொருளாகும். பல சமயங்களில் சர்ச்சையைக் கிளப்பியதும் உண்டு. அப்படித்தான் மலையாள நடிகை சைத்ரா பிரவீன் தான் நடித்துள்ள ’லைஃப் லைன் ஆஃப் பேச்சுலர்’ திரைப்பட விழாவிற்கு அணிந்து வந்திருந்த டிரான்ஸ்பரன்ட் புடவைதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

பலரும் அவர் தனது பப்ளிசிட்டிக்காக தான் அப்படியான உடை அணிந்து வந்தார் என்று கூறி வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சைத்ரா விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, “கோழிக்கோட்டின் அவமானம் நான் என்ற ரீதியில் கமென்ட் செய்கிறார்கள். அது எனக்கு வருத்தம். நான் பப்ளிசிட்டிக்காக அந்த புடவை அணியவில்லை. அது என் அம்மாவுடையது. சென்டிமென்டாக அந்த புடவையை நான் கட்டிச் சென்றேன். நான் இந்த கருப்பு சேலையில் மிகவும் அழகாக இருப்பதாக அம்மா கூறினார். மேலும் என் தந்தை ஒரு டீச்சர். அவர் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்தாலே திட்டுவார். ஆனால், இந்த உடையில் என்னைப் பார்த்து அவர் திட்டவேயில்லை.

நாம் என்ன ஆடை அணிந்திருந்தாலும், அதை உற்றுப்பார்ப்பவர்களை என்ன செய்யமுடியும் என்று கூறினார். நான் ஒரு பல் மருத்துவர். சினிமா மீதான ஆர்வத்தால் மாடலிங் மூலம் இங்கு வந்தேன். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது, இந்த சர்ச்சை தேவையில்லாத ஒன்றுதான்!” எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in