ஷாருக்கானும் நானும் அந்த மாதிரியெல்லாம் இல்லை... உண்மையை உடைத்த ஆண் நண்பர்!

ஷாருக்கான் - விவேக் வஸ்வானி
ஷாருக்கான் - விவேக் வஸ்வானி

நடிகர் ஷாருக்கான் தன் ஆண் நண்பருடன் உடலுறவு கொண்டார் என்ற செய்தி பல காலமாக பாலிவுட்டில் உலவி வருகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட அந்த ஆண் நண்பர் பதில் சொல்லி இருக்கிறார்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடியவர் நடிகர் ஷாருக்கான். திரைத்துறையில் பிரபலம் என்றாலே கூடவே அவர்கள் குறித்த கிசுகிசுவும் வதந்திகளும் வருவது சகஜம். அப்படியான ஒரு வதந்திக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது. அதாவது நடிகர் ஷாருக்கான் சினிமாவில் நுழைவதற்காக வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் தன்னுடைய நண்பர் விவேக் வஸ்வானி என்பவருடன் தங்கி இருந்துதான் வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் விவேக்குடன் உடலுறவில் ஈடுபட்டார் என்ற செய்தி பாலிவுட்டில் பல காலமாக உலா வருகிறது. இதுகுறித்தானக் கேள்வி விவேக் வஸ்வானியிடம் சமீபத்திய பேட்டியில் எழுப்பப்பட்டது.

விவேக் வஸ்வானி
விவேக் வஸ்வானி

விவேக் வஸ்வானி தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகர், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவர் இதுகுறித்து, “ஷாருக்கான் என்னுடன் உடலுறவு கொண்டார் என்ற வதந்தியைப் பல காலமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நாங்கள் அப்படியானவர்கள் கிடையாது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடிய ஆரம்பத்தில் இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கி இருந்தோம். அப்போதெல்லாம் எங்கள் சிந்தனை வாழ்க்கையில் எப்படி முன்னுக்கு வர வேண்டும் என்பது மட்டும்தான். சினிமாவில் பிரபலமான ஒருவர் மீது தேவையில்லாத வதந்திகள் பரவத்தான் செய்யும். ஆனால், எங்கள் இருவரின் நல்ல நட்பைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பரவும் இந்த வதந்தி தவறான விஷயம்” எனக் கூறியுள்ளார்.

மேலும், ஷாருக்கான் - பிரியங்கா சோப்ரா டேட் செய்தார்களா என்ற கேள்விக்கு ஷாருக்கான் வாழ்வில் அவரது மனைவி கெளரி கானைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in