விஜய் வழியில் விஷால்... மக்களுக்கு நல்லது செய்ய போவதாகப் பேட்டி!

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

நடிகர் விஷால் இன்று மதியம் அண்ணாநகரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். மேலும், அரசியலுக்கு வந்தால் தான் நிச்சயம் நல்லது செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் விஷால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ள நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததைப் போலவே, இப்போது நடிகர் விஷாலும் வாக்களிக்க சைக்கிளில் வந்து கவனம் ஈர்த்துள்ளார்.

மேலும் தான் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன் என்றும் பேட்டி அளித்துள்ளார்.

மேலும், தனது எக்ஸ் பக்கத்தில், தான் வக்களிக்கத் தொடங்கியதில் இருந்து ஒரு தேர்தலைக் கூட தவற விட்டதில்லை எனவும் கூறியுள்ளார். ”ஒவ்வொருவருடைய வாக்குமே முக்கியம். எனவே, அனைவரும் சென்று வாக்களியுங்கள். இந்த முறை அதிக சதவீதத்தில் வாக்குப்பதிவு செய்யுங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.

விஷால் சைக்கிள் ஓட்டி வந்ததைப் பார்த்த ரசிகர்கள் விஜய் வழியை இவர் பின்பற்றுவதாகக் கூறி வருகின்றனர். அதாவது, இளையதளபதி என விஜய்க்கு பட்டம் உண்டு. அதேபோல, விஷாலும் புரட்சித்தளபதி என பட்டம் பெற்றார். விஜய் அறிவித்த பின்னரே இவரது அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினார். இப்போது விஜய் பாணியில் சைக்கிளில் வந்து வாக்களித்துள்ளார் விஷால்.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in