'அன்பே வா’ சீரியல் நடிகருக்குத் திருமணம்... பிரபலங்கள் வாழ்த்து!

விரா- நவீனா
விரா- நவீனா

பிரபல சீரியல் நடிகர் விராட்டுக்குத் தனது காதலியுடன் இன்று திருமணம் நடந்துள்ளது. விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இணையத்தில் அவருக்கு வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் விராட். இவரும் மேக்கப் ஆர்டிஸ் நவீனா என்பவரும் காதலித்து வந்தனர். காதலியுடன் இருக்கும் ரொமான்டிக்கானப் படங்களை அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருவார். இந்த ஜோடிக்கு எப்போது திருமணம் என பலரும் கேள்வி எழுப்பிய வந்தனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த ஜோடிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று காலை சென்னை, மகாபலிபுரத்தில் நண்பர்கள்- உறவினர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர். ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். ’என் வாழ்வில் பல காயங்கள் இருந்திருக்கிறது. அதை எல்லாம் உன் அன்பால் நீ தேற்றினாய்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in