‘சியான் 62’
‘சியான் 62’

விக்ரமின் 'சியான் 62’ இனி 'வீர தீர சூரன்'... மாஸ் டைட்டில் டீசர்!

விக்ரமின் ‘சியான் 62’ படத்தின் அப்டேட் அவர் பிறந்தநாளன்று வெளியாகி இருக்கிறது. காலை ‘தங்கலான்’ பட அப்டேட் மாலை ‘சியான் 62’ பட அப்டேட் என டபுள் டமாக்காவால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சியான்62’ படத்தின் அப்டேட்டைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விக்ரம் இன்று தனது 58வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதற்காக, ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். காலை விக்ரமின் ‘தங்கலான்’ படத்தில் இருந்து அவருடைய மேக்கிங் வீடியோ வெளியாகி இருந்தது.

இதை அடுத்து, ‘சியான்62’ படத்தின் அப்டேட்டைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சித்தா’ படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இதற்காக விக்ரமின் புது கெட்டப் பார்த்து ரசிகர்கள் வைரலாக்கினர்.

படத்தின் அப்டேட் என்ற அறிவிப்பின் போதே தலை, முகம் என முழுவதையும் மறைத்துக் கொண்டு, ‘தம்பி சேதி ஒன்னு தெரியுமா?’ என விக்ரம் கேட்கும்படியான போஸ்டர் இருந்தது. இப்போது படத்தின் டைட்டில் 'வீர தீர சூரன்' பார்ட்2 என அறிவித்துள்ளனர். இதன் மாஸான டைட்டில் டீரும் வெளியாகியுள்ளது. இதில் அவருடைய கதாபாத்திரப் பெயர் காளி. டைட்டில் டீசர் பார்த்த ரசிகர்கள் விண்டேஜ் விக்ரம் பேக் என தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம்

’தங்கலான்’, ‘சியான் 62’ படங்களை முடித்துவிட்டு அடுத்து விக்ரமின் படம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். சமீபத்தில் ‘ஜெமினி’ படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, சீக்கிரம் அப்டேட் எனச் சொல்லி இருந்தார் விக்ரம். இது ‘ஜெமினி2’க்கானதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in