என் மனைவியிடம் சொன்னத செஞ்சுட்டேன்... விக்ரம் பிரபு பெருமிதம்!

விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு

தன் மனைவியிடம் சொன்னதை செய்து விட்டதாக நடிகர் விக்ரம் பிரபு ‘இறுகப்பற்று’ பட விழாவில் பெருமிதமாகத் தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “’இறுகப்பற்று’ படம் ரிலீஸான அக்டோபர் 6ம் தேதி தான் என் மனைவியின் பிறந்தநாள் என்பதால் அவருக்காக இதை டெடிகேட் பண்ணுவதாக கூறினேன். டெடிக்கேட்டும் பண்ணிவிட்டேன். அப்போது அவர் என்னிடம், ‘நீங்களும் கிட்டத்தட்ட படத்தில் பார்த்த கதாபாத்திரம் போல தான் இருக்கிறீர்கள்’ என்று கூறினார்.

இந்த படத்தை தியேட்டரில் பார்த்தபோது படத்தில் இடம்பெற்ற எல்லா கதாபாத்திரங்களுடனும் என்னை தொடர்புபடுத்தி பார்க்க முடிந்தது.

’இறுகப்பற்று’ பட விழா
’இறுகப்பற்று’ பட விழா

எந்த ஒரு படமும் ஏதோ ஒரு விதத்தில் நம்முடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிய வேண்டும் அல்லது நம்மை முழுதாக பொழுதுபோக்கு உணர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லா படத்திற்கும் ஒரே மாதிரியாகத்தான் பாடுபடுகிறோம். சில படங்கள் தான் மக்களிடம் சேருகின்றன. எந்த ஊருக்கு போனாலும் அங்கே உள்ள வீடுகளில் என்னுடைய தாத்தா படம் இருக்கும்.

‘இறுகப்பற்று’ படமும் அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் போய் சேர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. சில படங்களை ரசிகர்களுக்கு சரியாக கொடுக்காததற்காக அவர்களிடம் பலமுறை வருத்தம் தெரிவித்திருக்கிறேன். அந்த வருத்தம் தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in