அரசியலில் களம் காண தீவிரமாகும் விஜய்... ’தளபதி 69’ பட இயக்குநருக்கு போட்ட கண்டிஷன்!

விஜய் - ஹெச்.வினோத்
விஜய் - ஹெச்.வினோத்

நடிகர் விஜய் ‘தளபதி 69’ படத்தை முடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்து இருக்கிறார். இதற்காக அந்தப் பட இயக்குநருக்கு ஸ்ட்ரிக்டான கண்டிஷன் போட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் செப்டம்பர் 5 அன்று வெளியாக இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகளும் இப்போதே தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை அடுத்து விஜய் தனது 69வது நடிப்பார். இந்தப் படம்தான் அவரது கடைசிப் படம் என சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இதற்கடுத்து அவர் சினிமாவை விட்டு விலகி தான் ஆரம்பித்த ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி மூலமாக முழு நேரமாக அரசியல் பணியில் இறங்க இருக்கிறார். அவரது ‘தளபதி 69’ படத்தை இயக்குவது வெற்றிமாறன், அட்லி, கார்த்திக் சுப்பாராஜ் எனப் பல இயக்குநர்களது பெயர்கள் அடிபட, இறுதியில் ஹெச்.வினோத் பெயர் உறுதியானது.

’தளபதி 69’ படத்திற்கான திரைக்கதையை உருவாக்குவதில் வினோத் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அரசியல் சார்ந்த கதையாகவே இது இருக்கும் என சொல்லப்படுகிறது. விஜயின் பிறந்தநாள் வரும் ஜூன் மாதத்தில் இந்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். இதற்கடுத்து ஆகஸ்ட் மாதமே ‘தளபதி 69’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

விஜய்
விஜய்

இந்த வருட இறுதிக்குள் இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்த வருடம் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட வேண்டும் என வினோத்திடம் விஜய் ஸ்ட்ரிக்டாக சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் பட அப்டேட் காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாலும், இன்னொரு பக்கம் அவர் இந்தப் படத்தோடு சினிமாவை விட்டு விலகுவதால் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in