ஜனநாயகக் கடமை ஆற்றுங்கள்... நடிகர் விஜய் வேண்டுகோள்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என நடிகர் விஜய் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மதியம் அவர் சென்னை, நீலாங்கரையில் வாக்குப் பதிவு செய்தார்.

நடிகர் விஜய் 'GOAT'  படப்பிடிப்பில் இருந்து இன்று விமானம் மூலமாக சென்னை வந்தார். அவருடன் ரஷ்யாவில் இருந்து ஒட்டுமொத்த 'GOAT' படக்குழுவினரும் சென்னை வந்தடைந்தனர். மதியம் 12.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார். வாக்குச்சாவடிக்குள் செல்வதற்குள் நடிகர் விஜயை ரசிகர்கள் சூழ்ந்து நெருக்கியதால் திணறிப்போனார் விஜய்.

12 மணிநேர பயணம், தலை, கையில் ஏற்பட்ட காயங்கள் என எதனையும் பொருட்படுத்தாது இன்று தனது வாக்கினை செலுத்தினார். தனது வாக்கினை தவறாது பதிவு செய்த விஜய், அதேபோல, அனைவரையும் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

தான் வாக்குப் பதிவு செய்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‘நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in