தென் மாவட்டங்களை வலுப்படுத்த திட்டம்... 2026 தேர்தலுக்கு விஜயின் பலே பிளான்!

விஜய்
விஜய்

தென் மாவட்டங்களை வலுப்படுத்தும் வகையில் அரசியல் களத்தில் நடிகர் விஜய் தீவிரமாகப் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்தத் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் கட்சியினர் கட்டியுள்ள பேனர்கள்
விஜய் கட்சியினர் கட்டியுள்ள பேனர்கள்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என தனது அரசியல் கட்சியை அறிவித்தப் பின்பு அரசியல் சார்ந்து அவரது ஒவ்வொரு நகர்வுமே ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அப்படி இருக்கையில், நேற்று தமிழகம் கடந்து கேரளாவிலும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் கேரள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து காணொலி மூலம் உரையாடியுள்ளார். இதில், கட்சிக்கு வரக்கூடிய விமர்சனங்களை இன்முகத்தோடு வரவேற்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார் விஜய்.

தனது அரசியல் கட்சியை அறிவிப்பதற்கு முன்பே விஜய் மக்களுக்கு உதவிகளை செய்ய ஆரம்பித்தார். குறிப்பாக, மாணவர்களுக்கு உதவித்தொகை, இலவச சட்ட ஆலோசனை மையம், இரவுநேர பாடசாலை எனப் பல விஷயங்களை செய்தார். தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்ட போது, அங்கு நேரிடையாக சென்று உதவிப் பொருட்களை வழங்கி அசத்தினார்.

ரசிகர் திரளில் விஜய்
ரசிகர் திரளில் விஜய்

தனது கட்சி குறித்தான அறிவிப்பிலேயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்றும் கூறினார் விஜய். 2026 தேர்தலில் தூத்துக்குடி அல்லது நாகை தொகுதியில் போட்டியிட விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் விரைவில் தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியில் தனது கட்சிக்கான முதல் மாநாட்டை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல் மாநாட்டில் கட்சி கொடி மற்றும் நிர்வாகிகள் அறிமுகமும் இருக்கும் எனவும் விஜய் வட்டாரத்தினர் கூறுகின்றனர். தென் மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே விஜய் இந்த முடிவெடுத்திருப்பதாகவும் சொல்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in