நடிகர் விஜயின் கடைசிப் படம்... ’தளபதி 69’ இயக்குநர் இவர்தானா?

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜயின் ‘தளபதி 69’ படத்தின் இயக்குநர் யார் என்பதுதான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநர் குறித்தான செய்தி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

விஜய்- வெற்றிமாறன்
விஜய்- வெற்றிமாறன்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனத் தனது அரசியல் கட்சியை அறிவித்துள்ளார். அரசியலில் முழு நேரமாக ஈடுபட வேண்டும் என்பதற்காக இப்போதைக்கு தான் ஒத்துக் கொண்ட இரண்டு படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, விரைவில் சினிமாவை விட்டு விலக இருக்கிறார் விஜய். இந்தத் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள அதே சமயம், அவரது அரசியல் வருகைக்கு உற்சாக வரவேற்புக் கொடுத்து வருகின்றனர்.

’GOAT' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில் விஜயின் கடைசிப் படமாக சொல்லப்படும் ‘தளபதி 69’ படத்திற்கு யார் இயக்குநர் என்பதுதான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

விஜய்- வெற்றிமாறன்
விஜய்- வெற்றிமாறன்

கார்த்திக் சுப்பராஜ், ஹெச். வினோத், அட்லி என வரிசையாக நீண்ட இந்தப் பட்டியலில் இப்போது வெற்றிமாறன் இணைந்திருக்கிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் டிவிவி நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. பழைய பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் விஜய்க்கு ஏற்கனவே கதை சொல்லி இருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வெற்றிமாறன் இதுவரை தான் இயக்கியப் படங்கள் எதுவுமே தோல்விக் கொடுக்காதவர். அதனால், வெற்றிமாறன் - விஜய் காம்பினேஷன் என்பதும் அதிக ரசிகர்களால் விரும்பப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. விரைவில் இதுகுறித்தான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...


'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in