செப்.5 ரிலீஸ்... நடிகர் விஜயின் 'GOAT' படம் குறித்து புதிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

விஜய், வெங்கட்பிரபு
விஜய், வெங்கட்பிரபு

நடிகர் விஜயின் 'GOAT' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் 'GOAT' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படக்குழு அமெரிக்கா சென்ற நிலையில் இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 5 அன்று படம் வெளியாக இருக்கிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

அதற்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், படத்தின் புரோமோஷனையும் படக்குழு முடுக்கிவிட்டுள்ளது. இந்தப் படத்தில் அப்பா-மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் விஜய். இதில் மகன் விஜயை இன்னும் இளமையாகக் காட்டுவதற்காக அமெரிக்காவில் இருக்கும் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர்.

இதற்காக, படம் தொடங்குவதற்கு முன்பே தனது உடலை ஸ்கேன் செய்ய படக்குழுவினருடன் விஜய் அமெரிக்கா சென்றிருந்தார். மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்தும் இந்தப் படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். இப்போது படத்தின் பேட்ச் வொர்க் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளதாம். மற்றபடி படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்கிறார்கள்.

நடிகர் விஜயும் படத்தில் தனக்கான டப்பிங்கை 50% முடித்திருக்கிறார். அமெரிக்காவில் நடைபெறும் இந்த போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை பார்வையிட வெங்கட்பிரபுவும் தயாரிப்பாளர் அர்ச்சகா கல்பாத்தியும் அங்கு சென்றுள்ளனர். இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி விட்டதாக அவர் கூறியுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in