ரிலீஸூக்கு முன்பே ரூ.100 கோடியை நெருங்கிய 'GOAT'... மாஸ் காட்டும் விஜய்!

விஜய், வெங்கட்பிரபு
விஜய், வெங்கட்பிரபு

நடிகர் விஜயின் 'GOAT' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே ரூ.100 கோடி பிசினஸை நெருங்கியுள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'GOAT' திரைப்படம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் புரோமோஷனும் வேகமெடுத்துள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

யுவன் இசையில் முதல் பாடல் வெளியானதை அடுத்து விஜயின் பிறந்தநாளான ஜூன் மாதம் அடுத்த சிங்கிள் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ பிசினஸூம் தொடங்கியுள்ளது.

ப்ரீ பிசினஸிலேயே ரூ.100 கோடியை நெருங்கியுள்ளது 'GOAT' திரைப்படம். இந்திய மொழிகளுக்கான 'GOAT' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ குழுமம் ரூ. 93 கோடிக்கு பெற்றிருக்கிறது. இது விஜயின் முந்திய படங்களான ‘பீஸ்ட்’, ‘லியோ’வைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜூன்
அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘புஷ்பா2’ அதிக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறது. இதன் தென்னிந்திய சாட்டிலைட் உரிமம் ரூ. 65 கோடிக்குதான் விற்பனை ஆகியிருக்கிறதாம். அதைவிட அதிகம் விற்பனையாகி ‘ஏரியாவில் தான் கில்லி’ என மீண்டும் நிரூபித்து மாஸ் காட்டியிருக்கிறார் விஜய்.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in