பிரபல நடிகைகளை குதிரை என்று சொன்ன விஜய்... சர்ச்சையாகும் வீடியோ!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசியுள்ள வீடியோ கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பேசுபொருளாக தற்போது நடிகர் விஜய் பிரபல நடிகைகளை குதிரை என்று சொல்லியுள்ள வீடியோ ஒன்று மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது.

’லியோ’ படத்தில் நடிகை த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சியை இயக்குநர் லோகேஷ் தருவார் எனத் தான் எதிர்பார்த்ததாகவும் ஆனால், அது நடக்கவில்லை என்றும் மன்சூர் அலிகான் பேசியுள்ள வீடியோ இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு நடிகை த்ரிஷா தனது சமூகவலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இனிமேல் மன்சூர் அலிகானுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார். ‘எந்தத் துறையானாலும் பெண்கள் மதிக்கப்பட வேண்டும். மன்சூரின் இந்தப் பேச்சு அதிர்ச்சியாக உள்ளது’ எனக் கூறி லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் எனப் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மன்சூருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நீங்கள் ஜோதிகா, சிம்ரனை நடிகர் விஜய் குதிரை என வர்ணித்ததை ஏன் எதிர்த்து கேள்விக் கேட்கவில்லை என தற்போது நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.

விஜய் தன்னிடம் ஒரு விஷயம் கூறியதாக நடிகர் ஷாம் பேசியிருக்கும் தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கும் வீடியோ ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது அவர் ஒரு பேட்டியில், "’12 பி’ படத்தில் நான் நடிகராக அறிமுகமாகிவிட்டேன். அதனை விஜயிடம் சொன்னேன். அப்போது அவர், 'டேய் யாருடா நீ முதல் படத்திலேயே ஜோதிகா, சிம்ரன்னு இரண்டு குதிரைகளோட வர” என்று கேட்டதாகத் தெரிவித்திருந்தார்.

குதிரை என ஆபாசம் தொனிக்கும் வகையில் விஜய் பேசியிருப்பதைக் குறித்து ரசிகர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in