80 வயதில் உள்ளவர்களுக்கும் 'தவெக' பெயர் தெரியணும்... நடிகர் விஜய் அதிரடி உத்தரவு!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

குக்கிராமத்தில் உள்ள எண்பது வயதானவர்களுக்கு நம் கட்சிப் பெயர் தெரிய வேண்டும் என தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பின்பு நடிகர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிப் பெயரை அறிவித்த பின்பு அவர்தான் கடந்த சில தினங்களாகப் பேசுபொருளாகி உள்ளார். வருகிற 2024 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமே களம் இறங்கப் போவதாகவும் அறிக்கை மூலம் தெரியப்படுத்தினார் விஜய்.

மேலும், அரசியலில் முழுநேரமாக இறங்கப் போவதால் சினிமாவை விட்டு விலகுவேன் எனவும் அவர் கூறினார். கட்சி அறிவித்தப் பின்பு தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் பனையூரில் நேற்று நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாது, கேரளாவிலும் தனது கட்சியைப் பலப்படுத்தும் நோக்கத்திலும் அந்நாட்டைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விஜய்
விஜய்

இந்தக் கூட்டத்தினை புஸ்ஸி ஆனந்த் ஒருங்கிணைத்துள்ளார். கூட்டத்தில் நடிகர் விஜய் நேரிடையாக பங்கேற்காமல் வீடியோ கால் மூலமாக ஐந்து நிமிடங்கள் கலந்துரையாடி உள்ளார். அதில் அவர், “விமர்சனங்களை இன்முகத்துடன் எதிர்கொள்ளுங்கள். அதிகளவில் பொது மக்களின் பிரச்சினைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதில் இடையூறுகளும், விமர்சனங்களும் வந்தால் இன்முகத்தோடு கடந்து செல்லுங்கள். வருகிற 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பணி தீவிரமடையும். குக்கிராமங்களில் கூட கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். அங்கு 80 வயதில் உள்ளவர்களுக்கும் நம் கட்சிப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in