”கத்துக்குட்டி அறிமுக இயக்குநர்களுடன் பணிபுரிய விருப்பமில்லை. படப்பிடிப்புத் தளத்தில் அனைத்து விஷயங்களையும் கையாள்வது ஒரு கலை” என நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார். இவரது இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாளினி தாக்கூர் நடிப்பில் ஏப்ரல் 5 அன்று வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. இந்தப் படம் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா பேட்டியளித்த போது, “கத்துக்குட்டி புதுமுக இயக்குநர்களுடன் பணிபுரிய தனக்கு விருப்பமில்லை. தான் பணிபுரியும் இயக்குநர் அதற்கு முன்பு குறைந்தபட்சம் ஒருபடமாவது இயக்கி இருக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் பேசிய அவர், “என்னதான் உதவி இயக்குநராக இருந்திருந்தாலும் இயக்குநராகும் போது இருக்கும் சூழல் வேறு. களத்தில் பல விஷயங்கள் சவாலாக இருக்கும். பட்ஜெட்டை சமாளிப்பதும் பெரிய விஷயம். இந்த அழுத்தங்களை எல்லாம் அவர்கள் முன்பு கையாண்டிருப்பது அவசியம். அதாவது அவர்களுக்கு வார்ம் அப் போல இருக்கும்.
அதனால், நான் பணிபுரியும் இயக்குநர் குறைந்தபட்சம் ஒருபடமாவது அதற்கு முன்பு இயக்கி இருக்க வேண்டும். மேலும், என்னை முழுமையாக அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் கவனித்துதான் இயக்குநரை தேர்வு செய்வேன். இதனால்தான் புது இயக்குநர்களுடன் பணிபுரிய விருப்பமில்லை என்கிறேன்” என்றார்.
கடந்த வருடம் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் ‘குஷி’ படம் வெளியானது. இதற்குப் பிறகு ‘ஃபேமிலி ஸ்டார்’ படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!
பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!
தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!