சினிமாவில் அதற்கான ஸ்பேஸ் கொஞ்சம் குறைவுதான் - நடிகர் தங்கதுரை பேட்டி!

நடிகர் தங்கதுரை
நடிகர் தங்கதுரை

சின்னத்திரை, சினிமா இரண்டிலும் பயங்கர பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தங்கதுரை. நகைச்சுவைக் கலைஞராக சின்னத்திரையில் ஆரம்பித்த இவரது பயணம் பெரிய திரையில் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் தனது தற்கொலை ஜோக்கை விட மாட்டேன் என விடாப்பிடியாக இருப்பவர், விரைவில் ரிலீஸ் ஆகும் ‘லால் சலாம்’ படத்திலும் நடித்துள்ளார். சின்னத்திரை, சினிமா அனுபவம் குறித்து அவரிடம் பேசினோம்.

சின்னத்திரையில் உங்கள் நகைச்சுவைக்குக் கிடைத்த வரவேற்பு சினிமாவிலும் இருக்கிறது என நினைக்கிறீர்களா?

தங்கதுரை
தங்கதுரை

சின்னத்திரையும் பெரியதிரையும் எனக்கு வேறு வேறு களமாகத்தான் இருக்கிறது. சின்னத்திரையில் நம் ஜோக்கை எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றிச் சொல்லலாம். அது ரசிகர்களுக்கும் பிடித்தது. ஆனால், சினிமாவில் நமக்குக் கொடுக்கும் கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும். அதனால், அந்த ஸ்பேஸ் கொஞ்சம் குறைவுதான்.

ஆனாலும் அப்பப்போ தங்கதுரை வெளியே வந்துவிடுவான். ரசிகர்கள் கொடுக்கும் உற்சாகத்தில்தான் தங்கதுரை தற்கொலை ஜோக்ஸ் என அடுத்த புத்தகத்தையும் ஆன்லைனில் ரிலீஸ் செய்திருக்கிறேன். என்னுடைய வளர்ச்சிக்கு உதவிய வடிவேல் பாலாஜி அண்ணனின் பங்களிப்பை என்றைக்குமே நன்றியுடன் நினைத்துப் பார்ப்பேன். இந்தப் புத்தகம் மூலம் வரும் பணத்தின் ஒரு பகுதியை அவரின் குடும்பத்திற்குக் கொடுப்பேன்.

உங்கள் ஜோக்ஸூக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு எது?

தங்கதுரை...
தங்கதுரை...

பாராட்டில் இருந்தே பாசிட்டிவாக ஆரம்பிப்போம். நிறைய இயக்குநர்களே எனது ஜோக்ஸை பாராட்டி இருக்கிறார்கள். “என் பையனுக்கு, அம்மாவுக்கு எல்லாம் உங்க ஜோக்ஸ் பிடிக்கும்” எனச் சொல்லி மகிழ்ச்சியாக பாராட்டி கையோடு பட வாய்ப்பும் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி. இப்போது நான் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா மேமும் “என்னுடைய பசங்களுக்கு உங்க ஜோக்ஸ் ரொம்ப பிடிக்கும்” எனச் சொன்னார். இப்படி எல்லாத் தலைமுறையினரும் என்னுடைய ஜோக்ஸை ரசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிதானே!

நடிப்பதைத் தாண்டி மரம் நடுவது போன்ற விஷயங்களையும் ஆர்வமாக செய்து வருகிறீர்களே..?

ரஜினியுடன் தங்கதுரை...
ரஜினியுடன் தங்கதுரை...

நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும் என்பது எப்போதுமே என் மனதில் இருக்கக் கூடிய ஒன்றுதான். ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்ற விஷயங்களை பாலா செய்து வருகிறார். அவருக்கு வாழ்த்துகள். அவரைப் போலவே, என்னால் முடிந்த ஒரு சிறு பகுதிதான் இந்த மரங்கள் நடுவது.

என்னைப் பார்த்து என்னுடைய நட்பு வட்டாரத்திலும் நிறையப் பேர் இதை செய்து வருகிறார்கள். நிச்சயமாக இதற்கு இன்ஸ்பிரேஷன் விவேக் சார்தான். அவர் நம்மை விட்டுப் பிரிந்த பின்பு அந்த பணியை விடாமல் தொடர வேண்டும் என நினைத்து இந்த வருடத்தில் இருந்து ஆரம்பித்தேன். இந்த விஷயத்தில் விவேக் சார் விட்ட இடத்தை நான் நிரப்ப வேண்டும் என்று முடிவெடுத்தேன். இதற்காக ரஜினி சாரிடமும் வாழ்த்துகளைப் பெற்றேன். தேனியில் குறுங்காடு, மரம் நடும் மாரத்தான் என அடுத்தடுத்த திட்டங்களை வைத்திருக்கிறேன். அது நல்லபடியாக நடந்து வருவதில் மகிழ்ச்சி.

'லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது... படத்தை வைத்து எழுந்த சர்ச்சைகளை கவனித்தீர்களா?

’லால் சலாம்’ படப்பிடிப்பில்...
’லால் சலாம்’ படப்பிடிப்பில்...

’லால் சலாம்’ நிச்சயம் இந்த சர்ச்சைகளுக்கு சரியான கதையாக இருக்கும். விளையாட்டு, அதைச் சுற்றிய அரசியல் என்பதை நோக்கித்தான் படம் இருக்கும். ஐஸ்வர்யா மேம் சொன்னது போல அரசியல் இல்லாமல் நாம் இல்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் தானே! உங்களுக்கே படம் பார்க்கும்போது புரியும்.

ரஜினி சாருடன் நடித்தது உண்மையில் கனவு போலத்தான் இருக்கிறது. அவருடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘அவருடைய படத்திற்கு டிக்கெட் கிடைக்குமா என ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது எல்லாம் என் வாழ்வின் சந்தோஷமான நாட்கள்’ என்று சொன்னேன். அதுதான் எப்போதும் என் மனநிலை!

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in