’கங்குவா’ ரிலீஸ் காலதாமதமாவது ஏன்... கசியும் தகவலால் ரசிகர்கள் கவலை!

கங்குவா
கங்குவா

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படம் முடிவடைந்தும் இன்னும் வெளியீடு குறித்து அறிவிக்காமல் இருக்கிறார்கள். இதற்கான காரணம் வெளியில் கசிய ஆரம்பித்திருப்பதை அடுத்து சூர்யா ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

சிறுத்த சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. பீரியட் படமாக உருவாகி இருக்கும் இதில் கடந்த காலம், எதிர்காலம் என இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்கள் காட்டப்படுகிறது. கங்கா என்ற கதாபாத்திரத்தில் சூர்யா முறுக்கேற்றிய உடம்பு, போர் பயிற்சிகள், ஆதிகால தமிழ், வித்தியாசமான ஹேர்ஸ்டைல் என இந்தப் படத்தில் காணப்படுகிறார்.

கங்குவா
கங்குவா

படம் இந்த வருடம் ரிலீஸ் ஆகும் என அறிவித்து இருக்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவு செய்தும் இந்தப் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் திருப்தியாக வரவில்லையாம். அதனால், அதை மெருகேற்றும் பணியில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது, படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் அறிவிக்காமல் இருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.

அதாவது, என்னதான் ‘கங்குவா’ படத்திற்கு படக்குழு ஓவர் பில்டப் கொடுத்திருந்தாலும் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் படக்குழு எதிர்பார்த்த தொகைக்கு போகவில்லையாம். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

புதிய தோற்றத்தில் நடிகர் சூர்யா
புதிய தோற்றத்தில் நடிகர் சூர்யா

‘சூரரைப் போற்று’, ‘ஜெய்பீம்’ என சூர்யாவின் முந்தைய படங்கள் ஓடிடியில்தான் ஹிட்டானது. அதன் பின்பு திரையரங்குகளில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ தோல்விப் படமாக அமைந்தது. ’விக்ரம்’, ‘ராக்கெட்டரி’ படங்களிலும் சிறப்புத் தோற்றத்தில் தான் சூர்யா நடித்திருந்தார்.

இதனால், மூன்று வருடங்கள் கழித்து திரையரங்குகளில் வெளியாகும் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தைக் கொண்டாட அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். அதுவும் இப்படி சிக்கலில் சிக்கித் தவிப்பது அவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து... வக்கீல் பரபரப்பு பேட்டி!

திடீர் பரபரப்பு... தொழில்நுட்ப கோளாறால் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்தி வைப்பு!

அதிர்ச்சி... பல்கலைக்கழக தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலம்!

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

பகீர் வீடியோ... 15வது மாடியில் இருந்து குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை! பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in