'தேங்க்யூ பொண்டாட்டி’... சூர்யா பகிர்ந்த ரொமாண்டிக் போஸ்ட்!

சூர்யா-ஜோதிகா...
சூர்யா-ஜோதிகா...

நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ள பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுக் கதையாக உருவாகி வரக்கூடிய இந்தப் படத்தில் இருந்து தீபாவளி வாழ்த்து சொல்லும் விதமாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், நடிகர் சூர்யாவும் தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து வழக்கம் போல தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லி இருந்தார். இந்த நிலையில், அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதிகாவுடன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, ‘வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமாக வாழ வேண்டும் என்று எங்களுக்குக் காட்டியதற்காக நன்றி பொண்டாட்டி’ என ஹார்ட்டின் எமோஜியோடு கூறியுள்ளார். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். தாய்லாந்தைத் தொடர்ந்து சென்னையில் இப்போது ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தீபாவளி தினமான நேற்றும் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. மொத்தப் படக்குழுவிற்குமே சூர்யா பிரியாணி விருந்து வைத்து அசத்தி இருக்கிறார். மும்பையில் படித்து வரக்கூடிய சூர்யாவின் மகன், மகள் மற்றும் ஜோதிகாவும் தீபாவளிக்காக சென்னை வர குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது சிவகுமார் குடும்பம்.

சூர்யா-ஜோதிகா
சூர்யா-ஜோதிகா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in