சர்ச்சையான கதை... ’புறநானூறு’ படத்தில் இருந்து விலகுகிறார் நடிகர் சூர்யா?

சுதா கொங்கரா - சூர்யா
சுதா கொங்கரா - சூர்யா

சுதா கொங்கரா- சூர்யா இணைந்திருக்கும் ‘புறநானூறு’ படம் தொடங்கத் தாமதமாகும் என முன்பு சொல்லப்பட்டது. இப்போது அந்தக் கதையில் இருந்து சூர்யா விலகுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது.

'சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு சூர்யா- சுதா கொங்கரா இணைந்துள்ள படம் ‘புறநானூறு’. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகும் இதுகுறித்து எந்தவிதமான அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதனால், ரசிகர்கள் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என இணையத்தில் படக்குழுவினரை விடாமல் துளைத்துக் கொண்டிருந்தனர். அதற்கெல்லாம் பதில் வராததால், படத்தில் வேறு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அவர்களே சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

இதனால், கடந்த வாரத்தில் இயக்குநர் சுதா கொங்கரா ‘இந்தப் படம் ஸ்பெஷலான கதை. அதனால், நாங்கள் எல்லோரும் இதை சிறப்பாகக் கொண்டு வர உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படத்துக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது’ என விளக்கம் கொடுத்தார்.

ஆனால், இப்போது படத்தில் இருந்து சூர்யா விலக அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில், ’புறநானூறு’ கதைப்படி இந்தி மொழி திணிப்புக்கு எதிரான சில விஷயங்களும், குறிப்பிட்ட அரசியல் கட்சியை எதிர்த்துப் பேசும்படியான கதைக்களத்தையும் அமைத்திருக்கிறாராம் சுதா கொங்கரா. இந்த ஒரு விஷயம் காரணமாகவே, சூர்யா இந்தக் கதையில் நடிக்க யோசிப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் உலா வருகிறது.

ஆனால், வலுவான கதைக்களத்திற்காகவே படம் இத்தனை தாமதம் எனவும் சொல்லப்படுகிறது. இந்தக் காரணத்தைச் சொல்லியே வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் தாமதமாகி வருகிறது. இதிலிருந்து சூர்யாவும் விலகிவிட்டார். அதேபோல் ‘வணங்கான்’ படத்தில் இருந்தும் விலகினார் சூர்யா. இதைப் போலவே, ‘புறநானூறு’ படமும் ஆகிவிடக் கூடாது என்பதுதான் ரசிகர்களின் கவலையாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in