சின்ன வயசுல அப்பா தோள்ல உக்காந்து அழகர பாத்துருக்கேன்... சித்திரைத் திருவிழாவில் நடிகர் சூரி பூரிப்பு!

நடிகர் சூரி
நடிகர் சூரி

"மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இந்தியாவுக்கே பெருமை; உலகுக்கே முக்கியமான திருவிழா" என நடிகர் சூரி பூரிப்புடன் பேசி இருக்கிறார்.

மதுரை மக்களுக்கு சித்திரை திருவிழாவும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் வருடாவருடம் கொண்டாட்டமான ஒன்று. அதன்படி, இந்த வருடம் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி-திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற நிகழ்வுகள் முடிந்த பின்பு, கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடந்தது.

கள்ளழகர் திருவிழா
கள்ளழகர் திருவிழா

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் நடிகர்கள் சூரி, பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசித்தனர். அப்போது நடிகர் சூரி, “இந்த வைபவம் உலகுக்கே முக்கிய திருவிழா” என்று பூரிப்புடன் சொன்னார்.

அழகர் திருவிழா குறித்து அவர் பேசியதாவது, “மதுரையில கள்ளழகர் அய்யா ஆத்துல இறங்குறத பார்க்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு. பல நூறு வருடங்களாக இந்த வரலாறு தொடர்கிறது. சின்ன வயசுல எங்க அப்பா அவருடைய தோள் மேல என்னை உட்கார வச்சு, ‘சாமிய பாருடா!’ன்னு சொல்வாரு. மறக்க முடியாத நிகழ்வுகள் அதெல்லாம். சினிமாவுல பிஸியான பிறகு தொடர்ச்சியா வர முடியல. இந்த வருஷம் கண்டிப்பா மிஸ் பண்ணாம வந்துட்டேன்.

நடிகர் சூரி
நடிகர் சூரி

சாதி, மதம் எல்லாம் கடந்து கள்ளழகரைப் பார்க்க இங்கே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்திப்பதை பார்க்கவே சந்தோஷமா இருக்கு. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உலகுக்கே முக்கியமான திருவிழா. இந்தியாவுக்கே பெருமை தரும் விழா.”

இப்படி பூரிப்புடன் சொன்னார் சூரி.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in