'சியான் 62' படத்தில் இணைந்த நடிப்பு அரக்கன்...சூப்பர் அப்டேட்!

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் நடிக்கும் 62வது படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். படக்குழு கொடுத்துள்ள இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா
நடிகர் எஸ்.ஜே. சூர்யா

’தங்கலான்’ படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தனது 62வது படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தை ‘சித்தா’ படத்தை இயக்கிய இயக்குநர் அருண்குமார் இயக்குகிறார். ’பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ போன்றப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண்குமார்.

முதல் முறையாக இவர் நடிகர் விக்ரமுடன் இணைகிறார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்தப் படம் குறித்தான அறிவிப்பு வீடியோவில், லுங்கி கட்டிக் கொண்டு காவல் நிலையத்தில் இருந்து அதிரடியாக நடிகர் விக்ரம் வரும்படியான கிளிம்ப்ஸ் விக்ரமின் ‘தில்’, ‘தூள்’ காலக்கட்டத்தை நினைவுப்படுத்தியது என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், ‘சியான் 62’ படத்தின் அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் விக்ரமும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடிக்கிறார். இந்தப் படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா, ‘’சித்தா’ போன்ற ராக்கிங் புராஜெக்ட் கொடுத்த அருண்குமாருடன் இணைவதில் மகிழ்ச்சி. அருண் இந்தக் கதையை சொல்லியவுடன் நிச்சயம் இது என்னுடைய இன்னொரு வெற்றிப் படம் என்ற நம்பிக்கை வந்தது. எல்லோருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்’ எனக் கூறியுள்ளார். விக்ரம், எஸ்.ஜே. சூர்யா என்ற காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in