ரஜினியால் 'அயலான்' படத்திற்கு வந்த சிக்கல்...குழப்பத்தில் எஸ்கே ரசிகர்கள்!

அயலான் படத்தில் சிவகார்த்திகேயன்
அயலான் படத்தில் சிவகார்த்திகேயன்

'அயலான்’ படத்திற்கு வந்துள்ள புதிய சிக்கலால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

’இன்று நேற்று நாளை’ புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’அயலான்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் காரணமாக பட வெளியீடு இத்தனை ஆண்டுகளாகத் தள்ளிப்போனது.

தீபாவளி அன்று வெளியாக இருந்த இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

’லால் சலாம்’: ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!
’லால் சலாம்’: ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

ஆனால், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ’லால் சலாம்’ திரைப்படமும் வெளியாகிறது. மேலும் இதன் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாலும் ரஜினி படம் என்பதாலும் ‘அயலான்’ படத்தை விட இதற்கு அதிக திரையரங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது. இதனால், ‘அயலான்’ படத்தின் வசூல் பாதிக்கப்படுமோ என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in