ஹீரோயின்களுடன் நெருக்கம் காட்டும் ராம்சரண்... மனைவி உபாசனா கடுப்பு!

ராம்சரண் - உபாசனா
ராம்சரண் - உபாசனா

தெலுங்கு ஹீரோ ராம்சரண் சினிமாவில் நடிக்கும் போது ஹீரோயின்களுடன் ரொம்பவே நெருக்கம் காட்டுவார். யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் இப்படி நடித்தாலும் இதைப் பார்க்கும் போது பல சமயங்களில் தனக்கு கடுப்பாகும் என அவரது மனைவி உபாசனா கூறியிருக்கிறார்.

ராம்சரண் - உபாசனா
ராம்சரண் - உபாசனா

என்னதான் நடிப்பு என்றாலும் திரையில் ஹீரோ- ஹீரோயின்களின் நெருக்கமான காட்சிகள் பல சமயத்தில் குடும்பத்துக்குள் குண்டு வைக்கும். இந்தக் காரணத்தை வைத்தே சினிமா பிரபலங்கள் மத்தியில் பிரச்சினைகளும் வெடிக்கும். இதனால் திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் திரையில் இதுபோன்ற நெருக்கமானக் காட்சிகளிலும் கவனமாக இருப்பார்கள்.

இப்படியான விஷயம் குறித்துதான் தனது மனநிலையை வெளிப்படுத்தி இருக்கிறார் உபாசனா. தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ராம்சரண். இவரது மனைவிதான் உபாசனா. பேட்டி ஒன்றில், ராம்சரண் கதாநாயகிகளுடன் திரையில் நெருக்கம் காட்டி நடிப்பது குறித்து உபாசனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ராம்சரண் - உபாசனா
ராம்சரண் - உபாசனா

அதற்கு, “ திருமணமான புதிதில் ராம்சரண் திரையில் ஹீரோயின்களுடன் நெருக்கம் காட்டி நடிப்பது தனக்கு சங்கடமாக இருந்தது. பல நேரங்களில் அதைப் பார்க்கும் போது எனக்கு கடுப்பாக இருக்கும். நான் சினிமா பின்னணி இல்லாமல் வந்தவள் என்பதும் இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

பல நேரங்களில், ‘ஹீரோயின்களுடன் இத்தனை நெருக்கமான இருக்கும் இதுபோன்ற காட்சிகளில் அவசியம் நடிக்க வேண்டுமா?’ என்று ராம்சரணிடம் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் இதுகுறித்து அவர் கோபப்படாமல் பொறுமையாகப் பேசி எனக்குப் புரிய வைத்திருக்கிறார். அதன் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதை ஏற்க ஆரம்பித்தேன். ஆனால், இப்போதும் சொல்கிறேன்... என்னைத் தவிர அவருக்கு சிறந்த ஜோடி யாரும் இல்லை” என்று சொல்லி இருக்கிறார் உபாசனா.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in