அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது...நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் சொன்ன பகீர் தகவல்!

பிரியா-முனிஷ்ராஜா...
பிரியா-முனிஷ்ராஜா...
Updated on
2 min read

தனது முன்னாள் கணவர் முனிஷ் ராஜா தினமும் குடித்துவிட்டு இரவில் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரியா-ராஜ்கிரண்...
பிரியா-ராஜ்கிரண்...

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் கணவர் முனிஷ் ராஜாவை விட்டு பிரிந்ததாகக் கூறினார். கடந்த 2022-ம் ஆண்டு சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜா என்பவரை வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்துகொண்டார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமானவர்.

முனிஷ் ராஜா- பிரியா இருவரும் சமூகவலைதளங்கள் மூலம் தான் அறிமுகமானார்கள். இருவரும் தங்கள் காதலை திருமணத்திற்கு எடுத்து செல்லும் நிலையில்தான் ராஜ்கிரண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விஷயம் இந்த பிரச்சினையில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

நடிகர் ராஜ்கிரணும் தன்னுடைய அதிருப்தியை சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இப்படியான சூழ்நிலையில்தான் பிரியா, தங்களது திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை என்றும் பிரிவதாகவும் கூறினார். இதற்கு முனிஷ் ராஜா, பிரியாவை பின்னால் இருந்து ராஜ்கிரண் குடும்பம் இயக்குவதாகக் கூறினார்.

பிரியா-முனிஷ்ராஜா...
பிரியா-முனிஷ்ராஜா...

இப்படியான சூழ்நிலையில்தான் பிரியா பேட்டி ஒன்றில், “என் அப்பா, அம்மாவை எதிர்த்து பல கனவுகளோடு என் திருமண வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனால், எங்களுக்குத் திருமணமான முதல் மாதத்திலேயே பல பிரச்சினைகள் வரத் தொடங்கியது. அவரை விட்டு விலகலாம் என்றபோது என்னைக் கொன்று விடுவேன் என மிரட்டி அடக்கினார்.

அத்துடன் தினமும் குடித்து விட்டு என்னை அடித்து, கண்டபடி பேசி துன்புறுத்துவார். இதுமட்டுமல்லாது, என்னிடம் பணம் கேட்டும் துன்புறுத்துவார். என் நண்பர்களிடம் பணம் கேட்டுக் கொடுத்திருக்கிறேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” எனக் கதறியுள்ளார் பிரியா.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in