'லால் சலாம்' படத்திற்கு மீண்டும் சிக்கல்... இந்த நாட்டில் படம் வெளியிட தடை?

லால் சலாம்
லால் சலாம்

நடிகர் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ திரைப்படம் மீண்டும் பிரச்சினையில் சிக்கியுள்ளது. குறிப்பாக, இந்தப் படம் அரபு நாடுகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

’லால் சலாம்’ படத்தில்...
’லால் சலாம்’ படத்தில்...

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. வரும் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்' என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ளதால் இந்தப் படத்திற்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. மேலும், இந்தப் படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கர்நாடகா- தமிழகம் தண்ணீர்ப் பிரச்சினையில்," தமிழகம் கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பிச்சை எடுக்கிறது" என்ற ரீதியில் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவை தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாக்கிய நெட்டிசன்கள், ‘தமிழர்களை இப்படி இழிவாக பேசிய தன்யாவை எப்படி இந்தப் படத்தில் நடிக்க வைக்கலாம்? ‘லால் சலாம்’ வெளியிட தடை செய்ய வேண்டும்’ எனக் கொதித்தெழுந்தனர். இதுகுறித்து, செல்வம் என்பவரும் புகார் கொடுத்தார்.

'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த்
'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த்

இதற்கடுத்துதான், தன்யா அது தன்னுடைய பதிவில்லை என்றும் போலியாக சித்தரிக்கப்பட்டது என்றும் கூறினார். மேலும், ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்தப் பிரச்சினை ஓய்வதற்குள்ளேயே ’லால் சலாம்’ படத்திற்கு மற்றொரு புதிய பிரச்சினை வெடித்துள்ளது.

அதாவது, ‘லால் சலாம்’ படத்தில் இஸ்லாமியர்கள் தொடர்பான காட்சிகளும், மதக்கலவரம் தொடர்பான விஷயங்களும் படமாக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த படத்திற்கு குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் வெளியிட தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான விஷயம் இருந்தாலே குவைத் அந்த படங்களைத் தடை செய்கிறது. இப்போது ’லால் சலாம்’ படத்திற்கும் அதையே செய்துள்ளது. சமீபத்தில் வெளியான ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ மற்றும் நடிகர் மம்முட்டியின் ‘காதல் தி கோர்’ படத்திற்கு அரபு நாடுகள் வெளியிட தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in