ரீமேக்காகும் ரஜினியின் `பாட்ஷா’... ஹீரோ யார் தெரியுமா?

பாட்ஷா
பாட்ஷா

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் ‘பாட்ஷா’. இந்தப் படத்தை அதன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ரீமேக் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதில் யார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

 பாட்ஷா ரஜினி
பாட்ஷா ரஜினி

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா எனப் பலரும் நடித்திருந்த படம் ‘பாட்ஷா’. மாணிக்கம், பாட்ஷா என்ற இரு கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடித்திருந்த இந்தப் படம் அவரது சினிமா கரியரில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது. அமைதியான ஆட்டோ டிரைவராக ஒரு பக்கமும் பிளாஷ்பேக்கில் அதிரடி பாட்ஷாவாகவும் ரஜினி நடித்திருந்த இந்தப் படம் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் அதனை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம்.

இதன் இரண்டாம் பாகம் உருவாகுமா என இயக்குநரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ’ஒரு பாட்ஷாவே போதும் இரண்டாம் பாகம் வேண்டாம்’ என ரஜினி மறுத்து விட்டதாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியிருந்தார்.

அஜித், விஜய்
அஜித், விஜய்

இந்த நிலையில், இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ரீமேக் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாது, இந்தப் படத்தில் அஜித் அல்லது விஜய் இருவரில் ஒருவர் நடித்தால் இந்தக் கதைக்கு சரியாக இருக்கும் எனவும் அவர்களிடம் சுரேஷ் கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து அவரிடம் ’அஜித், விஜய் யார் உங்கள் சாய்ஸ்?’ எனக் கேட்டதற்கு அவர், ‘அஜித் ஏற்கெனவே ‘பில்லா’ ரீமேக்கில் நடித்திருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அதுபோல, அவர் ‘பாட்ஷா’ படத்திலும் நடிப்பதற்கு சரியாக இருப்பார்’ என அவர் கூறியுள்ளார். இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in