'கூலி’ படக்குழுவை கதறவிட்ட இளையராஜா... ஜகா வாங்கிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

'கூலி’ படத்தில் தனது இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “அது இசையமைப் பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையிலான பிரச்சினை என ஜகா வாங்கி இருக்கிறார்.

பாடல்களுக்கான உரிமம் பெறுவது தொடர்பான வழக்கில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய படமான ‘கூலி’யின் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. இதில் அவரின் இரண்டு பழைய பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

ரஜினி - இளையராஜா
ரஜினி - இளையராஜா

'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இடம்பெற்ற 'சம்போ சிவ சம்போ' பாடலின் வரிகளும், 'தங்கமகன்' படத்தில் இடம்பெற்ற 'வா வா பக்கம் வா' எனும் பாடலின் இசை பின்னணியும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதற்காக ‘கூலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு, தனது பாடலுக்கு முறையான உரிமம் பெற வேண்டும் அல்லது ’கூலி’ படத்தின் டீசரில் இருந்து அவற்றை நீக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா.

இந்த நிலையில், ‘வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக மும்பை சென்றிருந்த ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ‘கூலி’ படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி” என்றார். அடுத்ததாக, இளையராஜா தொடர்ந்துள்ள காப்பி ரைட்ஸ் வழக்கு குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

ரஜினி- அமிதாப்
ரஜினி- அமிதாப்

அதற்கு, ”அது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையிலான பிரச்சினை. அடுத்து வரவிருக்கும் ’வேட்டையன்’ படம் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது” என்றார். நேற்று ரஜினி- அமிதாப் இருவரும் கோட் சூட் அணிந்து ஸ்டைலிஷாக இருக்கும்படியான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in