ஹீரோவாக என்னை ஒதுக்குறாங்க... கண்கலங்கிய நடிகர் புகழ்!

புகழ்
புகழ்

”ஹீரோவாக என்னுடன் நடிக்க நடிகைகள் யோசிக்கிறார்கள். என்னை ஒதுக்குகிறார்கள்” என்று நடிகர் புகழ் கண்கலங்கி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

சின்னத்திரையில் நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ இவருக்கு இன்னும் பிரபல்யத்தைத் தேடித் தந்தது. பின்பு, இதன் மூலம் கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.

புகழ்
புகழ்

’யானை’, ‘வலிமை’ போன்ற படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். இப்போது அடுத்தக் கட்டமாக ஹீரோவாக நடித்து வருகிறார் புகழ். ஆனால், அடுத்தடுத்தப் படங்களில் ஹீரோவாக நடிக்க கதாநாயகிகள் ஒத்துக்கொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “வாழ்க்கையில் எல்லோருக்கும் அடுத்தக் கட்டம் செல்ல வேண்டும் என்பதுதான் விருப்பம். அப்படிதான் இப்போது படங்களில் கதையின் நாயகனாக நான் நடித்து வருகிறேன். ஆனால், என்னுடன் ஹீரோயினாக நடிக்க பலரும் தயக்கம் காட்டுகிறார்கள். நானே சிலரிடம் சமூகவலைதளத்தில் மெசேஜ் செய்து கேட்டேன்.

நடிகர் புகழ்
நடிகர் புகழ்

ஆனால், என் மெசேஜைப் பார்க்கிறார்களே தவிர, அதற்கு பதில் சொல்லவில்லை. என் கூட நடிக்கலைன்னா கூட பரவாயில்லை. கதை கேட்கக் கூட அவர்கள் தயாராக இல்லை என்பதுதான் வருத்தம். அந்த சமயங்களில் என்னை நானே சமாதானம் செய்து கொள்வேன்” எனக் கண்கலங்கி பேசியுள்ளார் புகழ்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in