'லியோ’ டிரெய்லரின் சர்ச்சைக்குரிய வசனம்... `குக் வித் கோமாளி’ புகழ் சொன்ன அதிரடி பதில்!

குக் வித் கோமாளி’ புகழ்
குக் வித் கோமாளி’ புகழ்

’லியோ’ டிரெய்லரில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனம் குறித்து நடிகர் புகழ் பேசியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘லியோ’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் நடிகர் விஜய் பெண்கள் குறித்து பேசிய தகாத வார்த்தை சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து ரசிகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் புகழ் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்தான கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது, “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ‘லியோ’ படத்தின் டிரெய்லரை நான் இன்னும் பார்க்கவில்லை. இப்போது குழந்தை பிறந்துள்ளதால் மனைவி, குழந்தையுடன் நேரம் செலவிட்டு வருகிறேன்.

நீங்கள் சொல்வது போல அந்த டிரெய்லரில் கெட்ட வார்த்தை இருந்தால் அதை கண்டுகொள்ளாதீர்கள். அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் நடிகர் யோகிபாபுவின் இடத்தைப் பிடிக்கப் போகிறேன் என்று சொல்கிறார்கள். நிச்சயம் இல்லை! அவரவருக்கென்று ஒரு இடம் இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in