’இந்தியன்2’ படத்தை அடுத்து ரிஸ்க் எடுக்கும் கமல்ஹாசன்!

அன்பறிவுடன் கமல்ஹாசன்
அன்பறிவுடன் கமல்ஹாசன்
Updated on
2 min read

'இந்தியன்2’ மற்றும் ‘தக் லைஃப்’ படத்தை அடுத்து தான் நடிக்க இருக்கும் படத்தில் அதிக ரிஸ்க் எடுக்க இருக்கிறார் கமல்ஹாசன். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

அரசியல் பணிகளைக் குறைத்து கொண்டு, சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். ‘இந்தியன்2’, ‘தக் லைஃப்’, ‘கல்கி 2898 ஏடி’ என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. இதில் ‘இந்தியன்2’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டார் கமல்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இன்னொரு பக்கம் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கு அடுத்து தன்னுடைய 237-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்பறிவு மாஸ்டர்கள் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் இது. கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் இவர்கள் தான் ஸ்டண்ட் செய்திருப்பார்கள். அவர்கள் பணி பிடித்துப் போன கமல்ஹாசன் அவர்களை இயக்குநர்களாக தன்னுடைய 237-வது படத்தில் அறிமுகப்படுத்துகிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களுடைய படம் என்பதால் இது முழுக்க முழுக்க ஆக்‌ஷனை மையப்படுத்தி ஹாலிவுட் படம் போல எடுக்கப்பட இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

பொதுவாக தனது படங்களில் புதுமுயற்சிகளை செய்ய விருப்பப்படும் கமல்ஹாசன், ஆக்‌ஷன் காட்சிகளிலும் பெரும்பாலும் டூப் இல்லாமல் நடிக்க விரும்புவார். அதுபோலவே, இந்தப் படத்திலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுக்க முடிவு செய்துள்ளாராம். ’67 வயதில் இந்த ரிஸ்க் எடுக்க வேண்டுமா?’ என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகிறது மழை!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு... குரூப் 2, 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!

மே 28 முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு; காவல் துறை அதிரடி

தாமதமாகும் ரெமல் புயல்... கடல் கொந்தளிப்பால் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னையில் திடீர் கனமழை பெய்தால்? தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in