ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்த நடிகர் ஜூனியர் என்டிஆர்: வைரலாகும் மெர்சிடிஸ் - பென்ஸ் கார் வீடியோ!

ஹைதராபாத் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்த நடிகர்  ஜூனியர் என்டிஆர்.
ஹைதராபாத் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்த நடிகர் ஜூனியர் என்டிஆர்.

ஹைதராபாத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தனது புது மெர்சிடிஸ் - பென்ஸ் காரில் நடிகர் ஜூனியர் என்டிஆர் இன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

‘தேவரா படத்தில் நடிகர்  ஜூனியர் என்டிஆர்
‘தேவரா படத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர்

தெலங்கு நடிகர் , ஜூனியர் என்டிஆர் அவரது ரசிகர்களால் டோலிவுட் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

‘தேவரா படத்தில் நடிகர்  ஜூனியர் என்டிஆர்
‘தேவரா படத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர்

‘தேவரா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாகம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் , ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இன்று வருகை தந்தார். கருப்பு நிற புத்தம் புது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் அவர் வந்திருந்தார். அவரது உடையும் கருப்பு நிறத்திலேயே இருந்தது. அவர் வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் காரின் விலை சுமார் 2.96 கோடி ரூபாயாகும்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உள்ளே சென்ற அவர் சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் பரவசமடைந்தனர். அவர் தனது புது காரின் பதிவுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. ஜூனியர் என்டிஆர் வட்டார அலுவலகத்திற்கு வந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் அவரது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in