நடிகர்கள் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் இம்மாதம் 16ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான புரோமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. 'இரும்புத்திரை', 'விஸ்வாசம்', 'ஹீரோ' படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் ’சைரன்’ மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை சென்னையில் நடைப்பெற்ற பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, “முதன் முதலில் ரூபனிடம் இருந்து தான் இந்தப்படம் ஆரம்பித்தது. ’அடங்கமறு’ இயக்குநரை அவர் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்தப்படத்தைப் போலவே இந்தப் படமும் கண்டிப்பாக வெற்றியடையும்.
இந்தப்படத்திற்கு வேறு தயாரிப்பாளரிடம் போகலாம் என்ற போது, கண்டிப்பாக இந்த படத்தை நாம தான் பண்ண வேண்டும் என்று சுஜாதா அம்மா (ஜெயம்ரவியின் மாமியார்) பிடிவாதமாக இருந்தார். ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை அவரிடத்தில் இருந்து ஆரம்பித்தது எனக்குச் சந்தோஷம்.
இந்தப்படத்தின் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும். கீர்த்தி அந்த கேரெக்டருக்கு சரியாக இருப்பார் என்று நினைத்தோம். அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச்சிறந்த உழைப்பாளி. சமுத்திரக்கனி அண்ணன் நிஜத்தில் எப்போதும் சமூக கருத்துக்களைச் சொல்பவர். அதற்கு நேர்மாறாக கேரக்டரில் அவரை நடிக்க வைத்துள்ளோம். ’என்னைப்போய் இப்படிப் பேச வைக்கிறீங்களே!’ என்பார். ஆனால் எனக்காக நடிக்க வந்தார்.
நான் புது இயக்குநர்கள் கூட படம் செய்கிறேன் என்கிறார்கள். நான் ஒரு கருவி அவ்வளவு தான். இயக்குநரின் உழைப்பு தான் படம் வெற்றிபெறக் காரணம். இந்தப்படத்தில் எனக்கு இரண்டு கதாபாத்திரங்கள். கொஞ்சம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். யோகிபாபுவும் நானும் டிவின்ஸ் மாதிரி ஒன்றாகவே இருந்தோம். ’கோமாளி’ படம் மாதிரி இந்தப்படத்திலும் அழகான டிராவல். மக்கள் ரசிப்பார்கள்” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!
இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!
8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!
நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!