விஜய் சொன்ன அந்த வார்த்தையால் மாறியது வாழ்க்கை... பிக்பாஸ் நடிகர் உருக்கம்!

இமான் அண்ணாச்சி
இமான் அண்ணாச்சி

நடிகர் விஜய் தன்னைத் தேடி வந்து பாராட்டிச் சொல்லிய வார்த்தையால் வாழ்க்கை மாறியது என ‘பிக் பாஸ்’ இமான் அண்ணாச்சி உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

தனது தனித்துவமான வட்டார வழக்கால் பிரபலமானவர் நடிகர் இமான் அண்ணாச்சி. சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் பின்பு சினிமாவிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தொலைக்காட்சிகளில் குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சியையும் கலகலப்பாகத் தொகுத்து வழங்கினார். இதுமட்டுமல்லாது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

சர்கார் விஜய்
சர்கார் விஜய்

இந்த மாதம் 10ம் தேதியன்று அமீர் நடிப்பில் ‘உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதில் இமான் அண்ணாச்சியும் இணைந்து நடித்துள்ளார். படம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் இவரது பேட்டி நேற்று வெளியானது. அதில் நடிகர் விஜய் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார். விஜய் தந்த பாராட்டால்தான் தன் வாழ்வே மாறிவிட்டது என்று பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, ”’வேட்டைக்காரன்’ படத்தில் விஜயுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பில் எங்கள் அனைவரையும் நன்றாக கவனித்துக் கொண்டார். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். ஆனால், அன்று ஒருநாள் நான் நடிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

250 பேர் நடிக்கும் காட்சி ஒன்றில் என்னை மட்டும் கவனித்து ‘இதற்கு முன்பு வேறு படங்களில் நடித்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டார். ‘இப்போதுதான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னேன். அதைக் கேட்டு அவர், ‘உங்களுக்கு சிறந்த நடிப்புத் திறமை இருக்கிறது. பெரிய ஆளா வருவீங்க!’ என்று வாழ்த்தினார்.

அவ்வளவு பெரிய நடிகர் வளர்ந்து வரும் என்னைப் பார்த்து அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் சொன்ன அந்த வார்த்தைதான் இந்த உயரத்திற்கு என்னை நிறுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in