8 கடற்படை வீரர்களை மீட்க அரசுக்கு துணை நிற்போம்... நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்!

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்
Updated on
1 min read

இரவு பகல் பாராது உழைத்த இந்திய கடற்படை வீரர்களை மீட்க இந்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு துணை நிற்போம் என நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ட்விட் செய்துள்ளார்.

புதிய நீர் மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் திட்டத்தை கத்தார் நாடு கடந்த வருடம் செயல்படுத்தி இருந்தது. இந்த வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்று 'அல்தாரா'.  இந்த நிறுவனம் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 75 பேரை பணியில் அமர்த்தியிருந்தது.

இந்த 75 பேரில் முன்னாள் இந்திய வீரர்கள் எட்டு பேர் இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், குற்றச்சாடு எழுந்த அந்த எட்டு நபர்களை கத்தார் உளவுத்துறை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் அந்த முன்னாள் இந்திய வீரர்கள் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது கத்தார் நீதிமன்றம். 

இந்த தீர்ப்பிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ’குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள இந்தியர்கள் 8 பேரைக் காக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து வருகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பதிவில், ’நமக்காக இரவு பகல் பாராது உழைத்த நமது கடற்படை வீரர்கள் 8 பேரையும் நம் தாயகத்திற்கு பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நமது இந்திய அரசு எடுக்கும் அத்துனை முயற்சிகளுக்கும் துணை நிற்போம். ஒற்றுமையுடன் போராடி நம் வீரர்களை மீட்போம்’ என பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in