முன்னாள் மனைவியின் பட ரிலீஸூக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்! கெத்து காட்டும் ஐஸ்வர்யா!

லால் சலாம் படத்தில் ரஜினி, விஷ்ணு விஷால்
லால் சலாம் படத்தில் ரஜினி, விஷ்ணு விஷால்

ரஜினி கெளரவ தோற்றத்தில் நடித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் 'லால் சலாம்’ படம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட ‘லால் சலாம்’ படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்து, படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

ஆரம்பத்தில், நடிகர் தனுஷ் மனைவியைப் பிரிகிறார் என்று செய்தி வெளியிட்டு வந்த பத்திரிக்கைகள், தனுஷின் நடவடிக்கைகள் பிடிக்காமல் ஐஸ்வர்யா தான் தனுஷைப் பிரிந்து செல்கிறார் என்பதை வெளிப்படுத்தின.

அதன் பின்னர், போயஸ் கார்டனில் புது வீடு கட்டி, கிரஹபிரவேசத்திற்கு தூது விட்டும், ரஜினி வீட்டில் இருந்து யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்கின்றனர் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

’லால் சலாம்’: ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!
’லால் சலாம்’: ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

நடிப்பு, இயக்கம் என்று தன் ரூட்டை மாற்றிக் கொண்டு பிஸியாக இருக்கும் தனுஷைப் போலவே ஐஸ்வர்யாவும் தன் முழு கவனத்தையும் திரையுலகில் செலுத்தி வருகிறார். தற்போது ‘லால் சலாம்’ ரிலீஸ் வேலைகளில் மூழ்கியிருக்கும் ஐஸ்வர்யா, நேற்று டிரெய்லர் வெளியிட்டு, பத்திரிக்கையாளர்களிடையே பேசும் போது, “ஆடியோ ரிலீஸில் நான் பேசியது படத்தின் புரோமோஷனுக்காகவா என அப்பாவிடம் கேட்டிருக்கிறார்கள். அது எனக்கு வருத்தமாக இருந்தது. சர்ச்சைகள், அரசியல் பேசி சூப்பர் ஸ்டார் படம் ஓட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் என்ன பேசப் போகிறேன் என்பதே அப்பாவுக்குத் தெரியாது. ‘லால் சலாம்’ எல்லோருக்குமானப் படம்” என்றார்.

நேற்று மாலை 5 மணிக்கு வெளியாக இருந்ததாகச் சொல்லப்பட்ட இந்தப் படத்தின் டிரெய்லர் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இரவு 9.30 மணிக்கு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in