செம ஸ்டைலிஷ்... காலம் திரும்புது... செல்வராகவனை இயக்குகிறார் நடிகர் தனுஷ்!

தனுஷ் - செல்வராகவன்
தனுஷ் - செல்வராகவன்

அண்ணன் செல்வராகவனை வைத்து படம் இயக்குவேன் என கனவில் கூட நினைத்ததில்லை என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் எமோஷனலாகப் பதிவிட்டுள்ளார்.

செல்வராகவனுடன் தனுஷ்.
செல்வராகவனுடன் தனுஷ்.

முதன்முதலாக ‘துள்ளுவதோ இளமை’யில் அறிமுகமான போது தனுஷை நடிகராக அத்தனை எளிதில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வளர்த்தியான ஒல்லி உடம்பு, கலரும் கம்பி என தன் உருவத்திற்காக பல கேலிகளை சந்தித்தாலும் ஹிட் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என திரைத்துறையில் அடுத்தடுத்த நகர்வுகள் என்று தன்னை வளர்த்துக் கொண்டார் நடிகர். இவர் இயக்கிய முதல் படமான ’பவர் பாண்டி’ வெற்றிப் பெற்றது. தனது 50வது படத்தை அவரே நடித்து, இயக்கி முடித்திருக்கிறார். வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டர் கதையாக உருவாகியிருக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி படத்தின் தலைப்பு ‘ராயன்’ என அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்திற்காக மொட்டை அடித்து ஆளே அட்டகாசமாக செம ஸ்டைலாக மாறியிருந்தார் தனுஷ்.

‘ராயன்’ நடிகர் தனுஷின் கனவுப் படம் என்றும் அதன் திரைக்கதையில் தனக்குப் பங்கில்லை என்று செல்வராகவன் சொல்லி இருந்த நிலையில், நடிகர் தனுஷ் ட்விட்டரில், ‘ராயன்’ படத்தில் செல்வராகவனின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு, ‘உங்களை இயக்குவே என்று நான் கனவிலும் நினைக்கவில்லை சார்’ என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

அண்ணனாக இருந்தாலும் இன்று வரையில், தன்னை ஹீரோவாக உருவாக்கிய செல்வராகவன் மீது தனுஷூக்கு மிகுந்த மரியாதை உண்டு. ரசிகர்களிடையே செல்வராகவன் படங்களுக்கு இருந்த பெரிய ஓபனிங் அத்தனையும் ‘இரண்டாம் உலகம்’ படத்தோடு காணாமல் போன நிலையில், படங்களை இயக்காமல், தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார் செல்வராகவன். காலம் திரும்புது... செல்வராகவனுக்கு ‘ராயன்’ பேர் சொல்லும் படமாக இருக்கும் என்கிறார்கள் உதவி இயக்குநர்கள்.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in