எல்லோரும் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்கள்... நான் வில்லேஜ் குக்கிங் சேனல் பார்த்துக் கொண்டிருந்தேன் - நடிகர் சிரஞ்சீவி கலகல!

நடிகர் சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி வில்லேஜ் குக்கிங் சேனலைப் பாராட்டி பேசியுள்ளார். நிதியாண்டு தொடர்பான மீட்டிங் சமயத்தில் தனக்கு ஒன்றும் புரியாததால், இந்த சேனலைப் பார்த்துத்தான் மகிழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.

ஒருவர், இரண்டு பேர் இல்லாமல் ஒட்டுமொத்த ஊருக்குமே சமைப்பது போல அதிகப்படியான உணவை இயற்கையான சூழலில் சமைத்துக் காட்டும் வில்லேஜ் குக்கிங் சேனல் தமிழகத்தில் வெகு பிரபலம். இந்தச் சேனலுக்குத் நானும் மிகப்பெரிய ரசிகன் என்றும் மீட்டிங்கின்போது கூட, நான் இந்த சேனலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன் எனவும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பட விழா ஒன்றில் கூறியுள்ளார்.

அந்த விழாவில் பேசிய சிரஞ்சீவி, “நிதியாண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருவதால் ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஒரு மீட்டிங்கில் இருந்தேன். அவர்கள் எல்லாம் சீரியஸாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் பேசும் விஷயம் எனக்குப் புரியவில்லை. ஆனால், அங்கிருந்து கிளம்பவும் முடியவில்லை. அப்போதுதான், என் மகள் எனக்கு சிபாரிசு செய்திருந்த வில்லேஜ் குக்கிங் சேனல் பற்றி எனக்கு நினைவுக்கு வந்தது.

அதில் அவர்கள் பார்வையாளர்களை, ‘எல்லாரும் வாங்க’ என வெல்கம் செய்தது, இன்னைக்கு ஒருபுடி என பேசியது எல்லாமே எனக்கு வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மீட்டிங்கில் நான் ஏதோ குறிப்புதான் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என மற்றவர்கள் எல்லாம் நினைத்துக்கொண்டிருந்தார்கள்” எனச் சொல்லவும் அரங்கம் அதிர்ந்தது கரகோஷம்!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடி உணவு உண்டு மகிழ்ந்தார். அதனால் இந்தச் சேனல் இன்னும் பாப்புலரானது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in