கருப்பு பணம் மூலம் உதவியா?: ஷாக் கேள்விக்கு நடிகர் பாலாவின் அதிரடி பதில்!

நடிகர் பாலா
நடிகர் பாலா

”கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றி உதவி செய்யவில்லை. வெயிலில் நின்று நான் கருத்தப் பணத்தைத்தான் உதவி செய்கிறேன்” நடிகர் பாலா அதிரடியாக பதில் கொடுத்துள்ளார்.

’கலக்கப் போவது யாரு?’, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர் பாலா. திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர் சமீபகாலங்களில் மக்களுக்கு இவர் அதிகம் செய்யும் சமூகசேவை, உதவிகள் மூலம் பேசுபொருளாகியுள்ளார். இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் பாலா.

நடிகர் பாலா
நடிகர் பாலா

விஜய் சேதுபதி , எஸ்.ஜே.சூர்யா, நடிகர் கார்த்திக் எனப் பல பிரபலங்களின் குரலில் மிமிக்ரி செய்து அசத்தியதோடு, பாடல்களுக்கு நடனமாடி கல்லூரி மாணவ, மாணவிகளை மகிழ்வித்தார். பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் பாலா.

அவரது தொடர் உதவிகள் பற்றி கேட்டபோது, ”என் பின்னால் இருப்பது கஷ்டங்கள், வெட்கம், அடி, வலி ஆகியவை மட்டும்தான். மூன்று வேளை உணவுக்கு நான் சிரமப்பட்டேன். அதுபோல, யாரும் கஷ்டப்படக்கூடாது என்றுதான் உதவி செய்ய ஆரம்பித்தேன்” என்றார்.

மேலும், “இப்போது நான் செய்யும் உதவிகளுக்கு நடிகர் லாரன்ஸ் அண்ணன் தான் தோள் கொடுக்கிறார். ஒரு சிலர் கூறுவது போல கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக நான் மாற்றவில்லை. வெயிலில் நின்று நான் கருத்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்கிறேன்” என்றவரிடம் விஜயின் அரசியல் வருகைக் குறித்து கேட்கப்பட்டது.

நடிகர் பாலா
நடிகர் பாலா

அதற்கு அவர், “யாராக இருந்தாலும் அரசியலுக்கு வந்தால் நல்லது தான் செய்வார்கள். மற்றவர்களைப் பற்றி சொல்வதற்கு எனக்குத் தகுதியில்லை. நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் முடிந்தது சம்பாதிப்பது மட்டுமே. ஒரு சிலர் சொல்வதைப் போல என் பின்னால் யாருமில்லை” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!

வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!

ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!

அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in