மகனின் நண்பர்களுடன் கால்பந்து ஆடி அசத்திய நடிகர் அஜித்... கலக்கல் போட்டோஸ்!

நடிகர் அஜித்
நடிகர் அஜித்

நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்கின் நண்பர்களுடன் கால்பந்து ஆடி அசத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்போது வைரலாகி இருக்கிறது.

குடும்பத்துடன் அஜித்...
குடும்பத்துடன் அஜித்...

நடிகர் அஜித் சினிமாவில் படு பிஸியாக வலம் வந்தாலும் தன் குடும்பத்துடன் நேரம் செலவிடத் தவறுவதே இல்லை. அண்மையில் கூட அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு சின்ன பிரேக் கிடைத்ததும் அங்கிருந்து துபாய்க்குப் பறந்து வந்து தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டார்.

துபாயிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கழித்த அவர், தன் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளையும் அங்கு சிறப்பாகக் கொண்டாடினார். சினிமா நிகழ்ச்சிகளை முற்றிலும் தவிர்ப்பதாக அஜித் மீது நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டுகள் உண்டு. இருப்பினும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் நடிப்பு, பைக் பயணம், விமானங்கள் மீதான தனது ஆர்வம், விளையாட்டு என பிஸியாக இருக்கிறார் அஜித்.

கால்பந்து விளையாடும் அஜித்...
கால்பந்து விளையாடும் அஜித்...

விளையாட்டில் அஜித் கொண்டிருக்கும் ஆர்வத்தைப் போலவே ஷாலினியும் ஷட்டில் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். இப்போது பெற்றோரைப் போலவே மகன் ஆத்விக்கும் விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

விளையாட்டில் மகன் வாங்கும் பதக்கங்களுடன் அஜித், ஷாலினி, அனோஷ்கா என இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகும். இந்த நிலையில் தான், தனது மகன் ஆத்விக்கின் நண்பர்களுடன் அஜித் கால்பந்து விளையாடி மகிழ்ந்திருக்கிறார்.

தனது அப்பா ‘தல’ போலவே ‘சின்னதல’யும் அசத்துகிறார் என வாழ்த்துகளைக் கூறி, இந்தப் புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in