அஜித்தின் பைக் ரைட் நிறுவனத்தின் மெகா பிளான்... அசத்தும் லிஸ்ட் இதோ!

அஜித்தின் பைக் ரைட் நிறுவனத்தின் மெகா பிளான்... அசத்தும் லிஸ்ட் இதோ!

பைக் சுற்றுலாவை அடுத்து காரிலும் சுற்றுலா செல்லும்படியாக தனது வீனஸ் மோட்டார் சைக்கிள் திட்டத்தை விரிவுபடுத்துகிறார் நடிகர் அஜித். இதுமட்டுமல்லாது, பெண்களுக்கான பிரத்யேக பயிற்சிகளும் இதில் தரப்பட இருக்கிறது.

பைக் சுற்றுப் பயணத்தில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், படப்பிடிப்பு முடிந்து சின்ன பிரேக் கிடைத்தாலும் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார். தன்னைப் போலவே, பைக் பயணத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்காக வீனஸ் மோட்டார் சைக்கிள்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித் அறிவித்தார்.

அஜித் பைக் ரட்
அஜித் பைக் ரட்

அனுபவம் வாய்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ், பெண்களுக்கான தனது முதல் சாலை பயிற்சி அமர்வை இந்த மாதம் சென்னையில் இந்த நிறுவனம் தொடங்க இருக்கிறது.

இதுகுறித்து, வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸின் முதன்மை இயக்குனர் சிவ சுவாமிநாத் கூறுகையில், "தன் மீது அன்பு கொண்டவர்களுக்காக நடிகர் அஜித் திரும்ப நன்றி செலுத்தும் விதமாகதான் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார். இது அஜித்தின் மனதிற்கு நெருக்கமான ஒன்று” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, “சட்டத்தை மதித்து பயணம் மேற்கொள்ளும் வகையிலும், அனைத்து பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கும் வகையிலும் ரைடர்களுக்கு கற்றல் பணியில் அஜித் தற்போது ஈடுபட்டுள்ளார். வரும் மாதங்களில், உள்நாட்டிலும் உலக அளவிலும் ரைடர்ஸ்க்கு தொடர் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் மே மாதத்திலும் அதைத் தொடர்ந்து ஜூலையில் ஆல்ப்ஸ் மலை உட்பட இந்த ஆண்டு சுமார் 20 ரைட் திட்டமிடப்பட்டுள்ளது.

பைக் பயணத்தில் அஜித்
பைக் பயணத்தில் அஜித்

இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை சர்வதேச அளவில் செயல்படும் முதல் இந்திய நிறுவனமாக மாற்றுவதும், பங்கேற்பாளர்களுக்கு தரத்தை உறுதி செய்வதும் அஜித்தின் முதன்மையான நோக்கம்” என்றார்.

BMW 1250 GSA x 2, ட்ரையம்ப் எக்ஸ்ப்ளோரர் x 2, ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா, ஹார்லி டேவிட்சன் X 440, டுகாட்டி மல்டிஸ்ட்ராடா மற்றும் ஒரு ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஆகிய பைக்குகள் வீனஸ் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் உள்ளன.

இது தவிர, BMW GS 1300 ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும், இசுஸு பிக்-அப், 3 பைக்குகளை எடுத்துச் செல்லக்கூடிய ஃபோர்ஸ் டிராவலர் மற்றும் 10 பைக்குகளை ஏற்றிச் செல்லக்கூடிய பாரத் பென்ஸ் டிரக் ஆகியவையும் இதில் அடங்கும். பைக் ரைட் தவிர்த்து கார் பயணங்களுக்கும் திட்டமிட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in