யூடியூப் முக்கிய அப்டேட்... வீடியோ தரத்தில் அடுத்த அதிரடிப் பாய்ச்சல்

ஸ்மார்ட் டிவியில் யூடியூப்
ஸ்மார்ட் டிவியில் யூடியூப்

வீடியோவின் காட்சி தரத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பதாக யூடியூப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. யூடியூபின் ப்ரீமியம் பயனர்கள் மற்றும் அந்த சேவைக்கு நகர விரும்புவோர் இந்த தகவலை அறிந்துகொள்வது அவசியம்.

போட்டி மிகுந்த ஓடிடி தளங்களின் மத்தியில், மிகப்பெரிய மற்றும் பரந்த ஓடிடி தளமாக விளங்குகிறது யூடியூப். கூகுளுக்கு அடுத்தப்படியாக இணையத்தின் மிகப்பெரும் தேடல் தளமாகவும் யூடியூப் விளங்குகிறது. அனைத்தையும் காட்சி தளத்துக்கு மாற்றியுள்ள யூடியூப் வளர்ச்சியை இப்போதைக்கு அடித்துக்கொள்ள ஆளில்லை.

யூடியூப்
யூடியூப்

யூடியூபின் பிரதான வருமானம் என்பது அதன் விளம்பரங்கள் மூலம் கிடைக்கிறது. வீடியோவின் இடையிடையே முளைக்கும் விளம்பரங்களை தடுக்க ஆட் பிரேக்கர்களை பார்வையாளர்கள் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவோருக்கு ஓரிரு முறை யூடியூப் அறிவுறுத்திப் பார்க்கிறது. வழிக்கு வராதவர்களின் கனக்குகளை முடக்கவும் செய்கிறது.

இதர ஓடிடி தளங்கள் போலவே விளம்பரங்கள் இடம்பெறாத, கட்டண சேவையையும் யூடியூப் வழங்குகிறது. இந்த ப்ரீமியம் சேவைக்கு தனது கோடிக்கணக்கான பார்வையாளர்களை நகர்த்திச் செல்ல திட்டம் வைத்துள்ளது. அவற்றில் ஒன்றாக காட்சித் தரத்தில் மேம்பட்ட அனுபவத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. ப்ரீமியம் சந்தாதாரர்கள் தங்களது யூடியூப் செட்டிங்ஸ் சென்று மாற்றங்களை செய்வதன் மூலம் புதிய காட்சி அனுபவத்தைப் பெறலாம்.

யூடியூப்
யூடியூப்

சல்லிசான கட்டணத்தில் கட்டற்ற இணைய சேவை கிடைப்பதால், பார்வையாளர்களும் காட்சி அனுபவத்தில் தரத்தை அதிகம் எதிர்பார்க்கின்றனர். அதிலும், ஸ்மார்ட் டிவிக்களின் ஆதிக்கம் அதிகமானதும், வீட்டு வரவேற்பறையில் திரையரங்குக்கு இணையான அனுபவத்துக்கு பார்வையாளர்கள் தயாராக உள்ளனர். அவர்களை ப்ரீமியம் சேவையில் இணைப்பதற்காகவும், புதிய மேம்பட்ட தரத்திலான காட்சி அனுபவத்தை யூடியூப் தர முன்வந்துள்ளது. முதலில் ஆப்பிள் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த இந்த வீடியோ அனுபவம் இனி இதர தளங்களின் பயனர்களுக்கும் கிடைக்கும்.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை

உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!

மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

புகார் கொடுக்க வந்த சிறுமியை சீரழித்த உதவி ஆய்வாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in