வாட்ஸ் ஆப் புதிய பாதுகாப்பு வசதி... புரொஃபைல் படங்களை களவாடுவது இனி கடினம்

வாட்ஸ் ஆப்
வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப்-பில் ஒருவரது புரொஃபைல் படத்தை மற்ற பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடை செய்யும் பாதுகாப்பு வசதி, ஆன்ட்ராய்டு போன்களை தொடர்ந்து ஐபோன்களுக்கும் அறிமுகமாகிறது.

சமூக ஊடகங்களில் பயனர்களின் தனியுரிமை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக தொடர்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார் மத்தியில் இது தொடர்பான பாதுகாப்பின்மை என்பது அச்சுறுத்தலாகவே நிலவி வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளை எடுப்பது பயனர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும், வருமானத்தை பாதிக்கும் என்ற அச்சத்தால் சமூக ஊடக நிறுவனங்கள் வாளாவிருக்கின்றன.

வாட்ஸ் ஆப்
வாட்ஸ் ஆப்

ஆனால் தவறுகள் நடக்கும்போது அதற்காக அரசாங்கம், நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தங்களது பாதிக்கப்பட்ட பயனர்கள் என பலதரப்பினரிடமும் சமூக ஊடகங்கள் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின. ஆனபோதும் அவை தங்களது பயனர் தனியுரிமை குறித்தான அக்கறையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறவில்லை. எனினும் சமூக ஊடகங்கள் மத்தியிலான போட்டி மற்றும் சந்தையில் தம்மை நிலை நிறுத்திக்கொள்வது ஆகியவற்றுக்காக சில பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு.

அந்த வரிசையில் வாட்ஸ் ஆப் சமூக ஊடகத்தில் ஒருவரது புரொஃபைல் படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுப்பது இனி தடை செய்யப்படுகிறது. வாட்ஸ் ஆப்-பின் தாய் நிறுவனமான மெட்டா, தனது இன்னொரு பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக்-கில், பயனரின் தேர்வுக்கேற்ப இந்த வசதியை நடைமுறையில் வைத்துள்ளது. தற்போது வாட்ஸ் ஆப் செயலியிலும் இதே வசதி தாமதமாக அறிமுகமாகிறது. இதன்படி ஒரு பயனரின் புரொஃபைல் படத்தை இதர பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது இயலாது போகும். இதனை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயற்சிப்பவருக்கு ஃபேஸ்புக் பாணியில் பாப் அப் தகவல் மூலம் வாட்ஸ் ஆப் உணர்த்தவும் செய்யும்.

வாட்ஸ் ஆப் புரொஃபைல் பிக்சருக்கு பாதுகாப்பு
வாட்ஸ் ஆப் புரொஃபைல் பிக்சருக்கு பாதுகாப்பு

2 மாதங்களுக்கு முன்னர் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி, தற்போது ஐபோன்களுக்கான ஐஓஎஸ் பயனருக்கும் அறிமுகமாகிறது. ஆனால் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலுமே ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை வாட்ஸ் ஆப் தடைசெய்தாலும், புரொஃபைல் படங்களை இன்னொரு கேமரா மூலம் படம் எடுக்க இயலும். எனவே, பயனர்கள் தாம் அனுமதிக்கும் நபர்கள் தவிர்த்து ஏனையோர் தம் புரொஃபைல் படங்களை பார்வையிட முடியாதபடி தடை செய்யும் செட்டிங்ஸ் நடைமுறைகள் மூலம் தங்கள் பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளலாம்.

இதையும் வாசிக்கலாமே...


குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in