ரஜினி - விஜய் ரசிகர்களை மோதவிட்ட கூகுள் முகநூல் பக்கம்!

ரஜினி - விஜய்
ரஜினி - விஜய்

முகநூலில் கூகுள் உபயத்தில் ரஜினி - விஜய் ரசிகர்கள் இடையிலான வழக்கமான மீம்ஸ் மோதல் களைகட்டி இருக்கிறது.

ரஜினி காந்த் என்றால் கமல்ஹாசன்; விஜய் என்றால் அஜித் இப்படித்தான் ரசிகர்கள் அணிதிரண்டு அக்கப்போரில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் சீட்டுக்கட்டை மாற்றிப்போட்டது போல ரஜினி - விஜய் என ரசிக மோதல் திடீரென மாறியது. தலைமுறை இடைவெளி கொண்ட ரஜினி - விஜய் இடையிலான ரசிக மோதலுக்கு ’சூப்பர் ஸ்டார்’ மகுடம் காரணமானது.

ரஜினி - விஜய்
ரஜினி - விஜய்

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சிலர் கொளுத்திப்போட்டதில், ரஜினி ரசிகர்கள் பொங்கியெழுந்தனர். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே என்று கொதித்தார்கள். ஆனால் மாஸ் ஹீரோவாக ரஜினிக்கு நிகராக வசூலிலும், ஊதியத்திலும் முன்நின்றதில் விஜய் உடனான ஒப்பீடு தவிர்க்க முடியாது போனது.

சமூக ஊடகங்களில், ரஜினி - விஜய் ரசிகர்கள் காரசாரமாய் மோதிக்கொள்வது ட்விட்டரில் வழக்கம். ஒரு மாறுதலுக்கு, கூகுள் உபயத்தில் அதன் முகநூல் பக்கத்தில் இருதரப்பு ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூகுள் தேடுபொறியில் அதன் மொழிபெயர்ப்பு பக்கம் பிரபலமானது. சில தருணங்களில் வேடிக்கையான மொழிபெயர்ப்புகளையும் கூகுள் வழங்குவதுண்டு. அப்படி மொழிபெயர்ப்புக்கு அவசியமில்லாத, உணர்வுபூர்வமான வார்த்தைகள் சிலவற்றை கூகுளின் முகநூல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழ் பரப்பை குறிவைத்த இந்த பதிவில், ’நலந்தானா?’, ’நீங்க சாப்பிட்டிங்களா?’ என்ற தமிழர்களின் உணர்வோடு கலந்த, குசல விசாரிப்புக்கான வாசகங்களை ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டுள்ளது.

ரஜினி - விஜய்
ரஜினி - விஜய்

இதனூடே ரஜினி மற்றும் விஜய் படங்களை பகிர்ந்து, அவர்களின் பஞ்ச வாசகங்களையும் பகிர்ந்திருந்தது. அவற்றில் படையப்பா தோற்றத்திலான ரஜினி தோன்றும் ’நான் ஒரு தடவை சொன்னா...’ வாசகமும், விஜயின் லியோ தோற்றத்திலான படத்தை பகிர்ந்து ’ஐயாம் வெயிட்டிங்’ என்று ஆங்கிலத்திலும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

கூகுள் முகநூல் பக்கத்தில் இந்த பதிவின் நோக்கம், தமிழ் பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். ரஜினி - விஜய் ரசிகர்கள் மூலம் அது எளிதில் அரங்கேறியது. வழக்கம்போல இருதரப்பு ரசிகர்களும் கூடி, தத்தம் நட்சத்திரங்களின் படங்களுக்கு கீழே ஜாலியான மீம்ஸ்களை பதிவு செய்து, எதிர்தரப்பினரை சீண்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!

கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!

அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!

நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in