வாட்ஸ் அப் கணக்கு கை மாறும் அபாயம்; ரத்தான மொபைல் எண்களை 90 நாள் கழித்தே மற்றவர்களுக்கு வழங்க ‘டிராய்’ உறுதி!

மொபைல் பயன்பாடு
மொபைல் பயன்பாடு

செயலிழக்கச் செய்யப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட மொபைல் எண், 90 நாட்களுக்கு பிறகே புதிய சந்தாதாரருக்கு ஒதுக்கப்படும் என உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றின் விசாரணையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ’டிராய்’ உறுதி அளித்துள்ளது.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் மனுவை விசாரித்த போது, டிராயின் இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தில் பதிவானது. குறிப்பிட்ட மொபைல் எண் செயலிழக்கச் செய்யப்பட்ட பிறகு அல்லது துண்டிக்கப்பட்ட பிறகு, இன்னொரு நபரால் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தொடர்பான கவலைகளை நீதிமன்றத்தில் மனுதாரர் முறையிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தற்காலத்தில் மொபைல் எண் என்பது வெறுமனே தகவல் தொடர்புக்கானது மட்டுமல்ல, அதனுடன் இணைந்த வங்கி முதல் சமூக ஊடகம் வரை பல்வேறு கணக்குகளையும் கையாள்வதற்கான சாவியாகவும் பயன்படுகிறது. மொபைல் எண்ணுக்கு வரும் ’ஓடிபி’ என்பது, மூன்றாம் நபர் கையில் சிக்கும்போது எழும் பாதிப்புகள் ஏராளம்.

குறிப்பாக ஒருவர் வசமிருந்து மொபைல் எண்ணை, தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் இன்னொருவருக்கு வழங்கும்போது, அந்த எண்ணின் முந்தைய உரிமையாளருக்கு பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. அவற்றில் ’வாட்ஸ் அப்’ கணக்கு சார்ந்த தனியுரிமை பிரச்சினையை தமிழக மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் எழுப்பினார்.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

இது தொடர்பாக விளக்கமளிக்க ஆஜரான டிராய், “செயல்படாத மற்றும் ரத்து செய்யப்பட்ட மொபைல் எண் என்பது, குறைந்தது 90 கழித்தே இன்னொரு நபருக்கு வழங்கப்படும். மேலும் வாட்ஸ் அப் நிறுவனத்தை பொறுத்தளவில், 45 நாட்கள் தொடர்ச்சியாக செயல்படாத வாட்ஸ் அப் கணக்குகள், அதன் பின்னர் இன்னொரு மொபைல் சாதனத்தில் செயல்படுத்த முயற்சிக்கும்போது தானாக அதன் தரவுகள் அழியும்படி செய்யப்பட்டுள்ளது. இது தவிர வாட்ஸ் அப் பயனர்கள் தாமாக தங்கள் வாட்ஸ் அப் கணக்கின் தரவுகளை அழிக்கவும் இயலும். பழைய வாட்ஸ் அப் கணக்கை அவர்களின் இன்னொரு மொபைல் எண்ணுக்கு மாற்றுவதும் எளிது” என்று விளக்கமளித்தார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளி போனஸ்... ஊழியர்களுக்கு கார்களை பரிசாக தந்த நிறுவன உரிமையாளர்!

நாளை கடைசி தேதி : ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

சென்னையில் பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்!

9வகுப்பறையில் சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி... மாரடைப்பால் பலியான சோகம்!

என்னை பலமுறை சாகடிச்சுட்டாங்க... நடிகர் விக்ரம் பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in